Posts

Showing posts from October 27, 2013

மணிவாசகரின் முத்தான மணிமொழிகள்...பத்து...

Image
மணிவாசகப் பெருந்தகையின் மணிமொழிகளைக் கற்போம், இறைவனின் - சிவபெருமானின் அருமை பெருமைகளை அறிவோம், அடியார்களின் இணக்கத்தை நாடுவோம்.... கன்றைப் பிரிந்த - இழந்த  பசுவைப் போல  கசிந்து கண்ணீர் மல்கி இறைவனின் திருவருளுக்காக ஏங்கித் தவிப்போம்....இந்த ஏக்கமே நமக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். இறைவனுக்காக மட்டுமே ஏங்குவோம்....  இங்கு காட்சியளிப்பவர் இடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான்.  இடைமருதன் இருக்க இனி இடையூறுகள் ஏது..... 1. கடவுளின்  இருப்பினை உணர்ந்தவர் ஜாதி பேதம் பார்க்க மாட்டார்கள். யாராவது ஜாதி பேதம் பாராட்டுகிறார்கள் என்றால்,  அவர்கள் இன்னும் கடவுள் இருப்பை உணரவில்லை என்பது பொருள். 2. அரசனாகிய என் இறைவனே! பொன்னம்பலத்திலே கூத்தாடும் என் பேரமுதே! என்று உளமார நினைத்து, வாயாற வாழ்த்தி நின் திருவடியினையே நோக்கி நின்றேன். அங்ஙனம் நிற்கும் அடியேன் நிலை, தக்க இறை நெருங்கி வருமாறும் கொக்கின் நிலையைப் போல் இருந்தது. 3. இறைவன் தன்னை ஆட்கொண்டவுடன் அறியாமைக் குணம், தமர் - பிறர் என்ற பாகுபாட்டு உணர்வு,  யான் என்ற செருக்கு,  எனது எனும் பற்று ஆகிய அனைத்தும் நீங்கிப்போன அருமையை உணரலாம