Posts

Showing posts from May 27, 2018

சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு

Image
27.5.2018 சென்னை இக்சா அரங்கத்தில் நடந்த சிறுவர் பாடல்கள், பாட்டி சொன்ன பாப்பா கதைகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. சிறுவர் இலக்கியச் செம்மல் திரு. புதுகை பி.வெங்கட்ராமன், அமுதா பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், திரு.மறைமலை இலக்குவனார், திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீதர். திரு.வசீகரன் முதலியோர் பங்கேற்றனர். திரு. வசீகரன் அவர்கள் எழுதிய “பாட்டி சொன்ன பாப்பா கதைகள்” நூலை வெளியிட்டுப் பேசிய போது...

சிறுவர் இலக்கியத்தில் மிகப்பெரிய வெற்றிடம்....

Image
சிறுவர் இலக்கியத்தில் மிகப்பெரிய வெற்றிடம்.... சிறுவர் இலக்கியப் படைப்பாளர் மற்றும் மூத்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நேற்று அதிர்ந்தேன். காரணம், புதுவையில் சாகித்ய அகாதெமியும் ஆரோவில்த தமிழ் மரபு மையமும் இணைந்து நடத்திய “சிறுவர் இலக்கியம்” குறித்த ஒரு கருத்தரங்கில் (15.10.2016) அவரோடு ஒரே மேடையில் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது.   “குழந்தைப் பாடல்களின் எதிர்காலம்” குறித்து அவர் பேச வந்தபோதுதான் அவர் எனக்கு முதன்முதலில் அறிமுகமானார். அதுமட்டுமல்ல நான் பேசப்போகும் “சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்” பற்றிய பேச்சுக்குத் இரண்டாவது அமர்வின் தலைவராகவும் வீற்றிருந்து நான் பேசியதைப் பொறுமையாகக் கேட்டவர். ஆனால், அந்தக் கட்டுரை திரு.முத்துகுமாரசுவாமி அவர்களின் உதவியோடு பழனிப்பா பிரதர்ஸ் நூலாக வெளியிட்டது. அதை அவர் பார்வைக்கு அனுப்புவதற்கு முன்பு அவர் இறைவன் திருவடியில் கலந்துவிட்டார். அதுதான் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இன்றிருப்பார் நாளை இல்லை.... மிகவும் எளிமையானவர். தானாகவே வந்து அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நெஞ்சை

நாடோடிக் கதை -3 கிலுகிலுப்பை

Image
நாடோடிக் கதை - உத்தரப்பிரதேசம்   தினமணி  - கொண்டாட்டம் 27.5.2018 (முதல் பதிப்பு) கிலுகிலுப்பை தமிழில் :   இடைமருதூர் கி . மஞ்சுளா                முன்பு ஒரு காலத்தில் நிகழ்ந்த கதை இது .   ராஜா ஒருவன் ஆடம்பரமாகத் தனது திருமணத்தை நடத்திக் கொண்டான் .   அவனுக்கு அழகு தேவதையாக அந்த ராணி அமைந்தாள் . ராஜா அவள் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருந்தார் . ஆனால் , திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை .   வாரிசு வேண்டுமே என்ற   எண்ணத்தில் அரசவையில் இருந்த ராஜகுருவை அழைத்து   ராஜா ஆலோசனை கேட்டார் .                அதற்கு ராஜகுரு , " ராணிக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பது சிரமம்தான் ராஜா '' என்று கூறினார் . பிறகு , ராஜாவின் ஜாதகத்தைப் பார்த்து , " ராஜா , 7 ஆம் எண்தான் உங்களுக்கு ராசியான எண் . நீங்கள் 7 ஆவது மாதத்தில் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு நகரத்தின் வெளியே 7 அடி எண்ணிக்கொண்டு செல்ல வேண்டும் . அப்போது ,   7 ஆவது அடி வைக்கும்போது எந்தப் பெண்ணை நீங்கள் சந்தித்தாலும்