Posts

Showing posts from October 8, 2017

இராதாகிருஷ்ணன் தத்துவம் - இராதையின் கண்மணி

Image
இராதையின் கண்மணி    by - - இடைமருதூர் கி. மஞ்சுளா பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகைகளுடன் தோழமை பூண்டு லீலைகள் புரிந்தது பரமாத்மா காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் உணர்த்துகிறது. இறைவன் ஒருவனே புருஷோத்தமன். இதர ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண் அம்சங்கள். இவர்களே கோபிகைகள். இவர்கள் நிலையிலிருந்து கடவுளை வழிபடுபவருக்கு அவன் ஒருவனைத் தவிர மற்றவெல்லாம் பெண்மயமாகவே காட்சி தரும். கோபிகைகள் கண்ணனைச் சூழ்ந்து புன்முறுவலுடன் ஆடுவதும் பாடுவதும் அன்புக் கடவுளிடம் ஆன்மாக்கள் சேர அடையும் குதூகலம்.       பக்தர்கள் பகவானைக் காண பரிவுடன் அணுகும்போது, பகவானும் பக்தர்களைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளத் தேடுகிறானல்லவா? கண்ணனுடன் லீலைகளில் ஈடுபட்டிருந்த கோபிகைகளின் தலைவியான உத்தம ஜீவனே "ராதை' என்பது. ராதையின் கண்மணியாக இருந்தவன் ஸ்ரீகிருஷ்ணன். இமைப்பொழுதும் கண்ணனை மனத்தால் பிரியாத பிரேம பக்தி உள்ளவள்தான் ராதை. ராதையின் பிரேம பக்தியில் கட்டுண்டு, விரும்பி எந்நேரமும் அவள் உள்ளம் புகுந்து உறைபவன் கண்ணன். அதனால்தான், பாமா, ருக்மணி ஆகிய இரு மனைவியருக்கும் அகத்திலும் புறத்திலும் அகப்படாத கண்ணன்,  ரா