Posts

Showing posts from September 1, 2013

எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

ருத்ராட்சம் தோன்றிய விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே... குளித்தவர்கள்தான் சோப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா.. ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து, நோயில் இருப்பவனுக்குக் கிடையாது என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா... அதுபோலத்தான் சுத்தபத்தமாக இருப்பவர்கள் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். இது ஒருபுறமிருந்தாலும், எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா... ஆமாம். ருத்ராட்சத்தை யார் வ

அனுபவம் பலவிதம்

Image
உன்னைத் தேடி உன் வீட்டுக்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம் என்று கூறுகிறது தைத்ரீய உபநிடதம். --------- விட்டுவிடப் போகுது உயிர் விட்டஉடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேர மும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். -பட்டினத்தார் ------- என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை உணராமல் உடல் இழந்தேன் பூரணமே... என்னதான் பெற்றாலும் எப்பொருள் பெற்றாலும் உன்னை அடையாதார் உய்வரோ பூரணமே... -பட்டினத்தார் ---------- இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் எஙகோவே! -துன்றுலே வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம். -வள்ளலார் --------- கோபத்தில் ஒருவனை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால், எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்தக் கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும். -சுவாமி விவேகானந்தர் --------