Posts

Showing posts from September 13, 2015

கலைக்கோயிலைச் சிதைக்கலாமா?

Image
கலைக்கோயிலைச் சிதைக்கலாமா? Author:   இடைமருதூர் கி. மஞ்சுளா First Published: Sep 22, 2014 1:46 AM Last Updated: Sep 22, 2014 1:46 AM உலகிலே மிகப் பிரம்மாண்டமான கோயில்; 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற தஞ்சைப் பெரியக் கோயிலைப் பற்றி விரிவாக ஏதும் கூறத்தேவையில்லை. காரணம், அக்கோயிலின் பெருமை சொல்லுக்கடங்காதவை. உலகிலே மிகப் பிரம்மாண்டமான கோயில்; 1000 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற தஞ்சைப் பெரியக் கோயிலைப் பற்றி விரிவாக ஏதும் கூறத்தேவையில்லை. காரணம், அக்கோயிலின் பெருமை சொல்லுக்கடங்காதவை. விடை கிடைக்காத வினாக்களைத் தன்னகத்துள் கொண்டு இலங்கும் தஞ்சைப் பெரிய கோயில், நம் தமிழக சோழ வரலாற்றின் சிறப்புமிக்க வரலாற்றுப் பக்கங்கள். இன்றளவும் உலக அதிசயங்களுள் ஒன்றாகவே அது திகழ்கிறது. இவ்வளவு சிறப்புமிக்க இக்கோயிலின் பழைமையான பெயர் அழகாபுரி. இவ்வூர் பற்றிய மிகத் தொன்மையான குறிப்புகள் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் கல்வெட்டுகளிலும் திருநாவுக்கரசரின் திருவீழிமிழலை திருத்தாண்டகத்திலும் காணப்படுகின்றன. செந்தலை எனும் ஊரில் உள்ள

வெற்றியின் விதை!

Image
வெற்றியின் விதை! By   dn இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - சிறுவர் மணி) ஓவியம் -சுமன் First Published :   27 March 2015 02:10 PM IST புகைப்படங்கள் ஒரு வாரமாகவே சுகுமார் மிகவும் குழம்பிப் போயிருந்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு, பரீட்சைக்கு இன்னும் 15 நாள்களே இருந்தன. பரீட்சை பயம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொருபுறம் அவன் மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தன அவன் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில சம்பவங்கள். அம்மாவிடம் எப்படிச் சொல்வது? தவறாக நினைத்து விடுவாரோ? அப்பாவிடம் சொன்னால் கண்டபடி திட்டுவாரோ? வேறு யாரிடம் இதுபற்றி கேட்கலாம்? என்ற எண்ணங்கள் அவனைப் படிப்பில் கவனம் தெலுத்த முடியாதபடி குழப்பிக் கொண்டிருந்தன.  பரீட்சை நாள்களில் தினமும் சுகுமார், இரவு 9 மணியிலிருந்து 12 மணிவரை படிப்பது வழக்கம். அன்றைக்கும் வழக்கம் போல இரவு 9 மணிக்கு மேல் தன் அறையில் படிக்க உட்கார்ந்தான். ஆனால், கவனமெல்லாம் படிப்பில் இல்லை. மடியில் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு மோட்டு வளையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அவனுக்குத் தேநீர் கொண்டுவந்த அவன் தாயார், "&

மாறுவேடம்

Image
மாறுவேடம் By   -இடைமருதூர் கி.மஞ்சுளா First Published :   15 August 2015 07:31 PM IST புகைப்படங்கள் வகுப்புக்குள் நுழைந்த வகுப்பாசிரியர்,"" யார் யார் மாறுவேடத்துக்குப் பெயர் கொடுக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். மாரியும் வேறு சில மாணவர்களும் பெயர் கொடுத்தனர். எட்டாம் வகுப்பு படிக்கும் மாரியப்பன் மனதுக்குள் "என்ன வேடம் போடலாம்' என்று யோசிக்கத் தொடங்கினான். மாரி சற்று முன் கோபக்காரன், சக மாணவன் நல்ல சட்டை போட்டு வந்தாலோ, புதிய பேனா வைத்திருந்தாலோ மிகவும் பொறாமைப்படுவான். யாரையும் மதிக்க மாட்டான். அதனால் அவனிடம் யாருமே நெருங்கிப் பழக மாட்டார்கள். அன்றிரவு குடும்பத்தினர், ஆளாளுக்கு ஒவ்வொரு வேடம் போடக் கூறினார்கள். அப்போது படுக்கையிலிருந்து எழுந்து வந்த பாட்டி, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, இவனை எப்படியாவது மாற்றியாக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ""கண்ணா! இந்த மாறுவேடந்தான் உன்னை நாளைக்கு பலருக்கும் அடையாளப்படுத்தப் போகுது. அதுக்கு முன்னாடி நான் சொல்ற இந்தக் குட்டிக் கதையைக் கேளு. நீதான் முதல

சக்கையா? சாரமா?

Image
சக்கையா? சாரமா? By   இடைமருதூர் மஞ்சுளா First Published :   04 July 2015 10:57 AM IST (தினமணி-சிறுவர்மணி) புகைப்படங்கள் பன்னிரெண்டு வயதான விமல் அறிவுத்திறன் கொண்டவன்..., ஆனால் முன்கோபி. கோபம் வந்தால் யார் எவர் என்று பாராமல் வாய்க்கு வந்தபடி திட்டி மனதைப் புண் படுத்திவிடுவான். விமலின் தந்தையும் தாயும் இது பற்றி மிகவும் கவலையுற்றனர். அவனுடைய நண்பன் கோபி நல்ல பழக்கமுடையவன். ஒருநாள் விமல் கோபியின் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பினான். ""அம்மா, கோபியோட பாட்டி, நான் யாருகிட்டேயாவது சண்டை போட்டால் என்னைப் பார்த்து "நீ சக்கையா? சாரமா? ன்னு சிரிச்சுக்கிட்டே கேக்கிறாங்களே...ஏம்மா?''என்று கேட்டான் விமல். ""நீ போய் கை. கால் கழுவிட்டு வா.., சொல்றேன்'' என்றாள் விமலின் அம்மா. விமல் கை கால்களை அலம்பிக்கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தபடி, ""இப்ப சொல்லுங்க..., ஏன் அந்தப் பாட்டி அப்படி சொன்னாங்க?''என்று திரும்பவும் கேட்டான். ""விமல் நீ கரும்பு ஜூஸ் குடிச்சிருக்கியா?'' "&qu

பாமாயிலும் பாதிப்புகளும்

Image
பாமாயிலும் பாதிப்புகளும்! By   இடைமருதூர் கி. மஞ்சுளா First Published :   25 April 2015 01:57 AM IST (தினமணி தலையங்கப் பக்கக் கட்டுரை) சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவில் பாமாயில் பயன்பாடு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இடையில் சிறிது காலம் இதன் பயன்பாடு குறைந்திருந்தது. தற்போது, பிற எண்ணெய்களின் விலை ஏற்றத்தைப் பார்த்து மிரண்டுபோன நடுத்தர வர்க்கத்தினர், குறைந்த விலையில் கிடைக்கும் பாமாயிலை சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணெய் எப்படித் தயாரிக்கப்படுகிறது? எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? பாமாயில் உடலுக்கு ஓரளவு நன்மை செய்தாலும், இதன் தயாரிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன, பாதிக்கப்படும் உயிரினங்கள் எவை என்பன பற்றி எல்லாம் நம்மில் பெரும்பாலோர் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல, அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் கூடக் காட்டுவதில்லை. நியாய விலைக் கடைகளில் (ரேஷன்) குறைந்த விலையில் கிடைத்தால் போதும் என்று வாங்கிச் செல்கின்றனர். பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப் பனை என்பது பனை மர குடும

உடன்போக்கிற்குத் தாயே துணை...

Image
உடன்போக்கிற்குத் தாயே துணை!   By   -மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா) First Published :   10 May 2015 06:57 PM IST (தினமணி - தமிழ்மணி) சங்க அக இலக்கியத்தில் தலைவியின் அன்னையான "நாற்றாய்' என்பவளின் பங்கு குறிப்பிடத்தக்கது. வயது வந்த ஆணும் பெண்ணும் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சங்ககாலம் தொட்டே இருந்ததை தமிழ் அக இலக்கியம் மட்டுமே விரிவாகப் பேசுகிறது. ஐந்திணை ஒழுக்கத்தின் அடிப்படையில் களவு, கற்பு என்னும் நிலையில் மக்களின் இல்லற வாழ்க்கையின் நுட்பங்களையும் மேன்மைகளையும் அழகுற வகுத்தளித்துள்ளார் தொல்காப்பியர். இல்லற வாழ்க்கை, களவு வாழ்க்கையில் தொடங்கி கற்பு வாழ்க்கையில் நிறைவுபெற வேண்டும். அதுவே சிறந்த இல்லற ஒழுக்கமுமாகும். இதில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களைக் காட்டிலும், உள்ளத்தால் ஒன்றுபட்டு இணைந்த களவு (காதல்) மணங்கள்தான் சங்ககாலத்தில் அதிகம் நிகழ்ந்துள்ளன. அப்போது அதற்கு எதிர்ப்பும் இருந்திருக்கிறது; வரவேற்பும் இருந்திருக்கிறது என்பதற்கு "நற்றாயே' சான்றாகிறார்.  தன் மகளின் களவு வாழ்வை எதிர்த்தாலும்

தாய்ப் புலம்பல்

Image
தாய்ப் புலம்பல்! By   ஜெயவிஜயா (இடைமருதூர் கி.மஞ்சுளா) First Published :   14 June 2015 12:58 AM IST புகைப்படங்கள் பெண் பிள்ளைகளைப் பெற்ற தாய்-தந்தையர் எதையும் தாங்கும் இதயத்தோடு இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் மீது அன்பு, பாசத்தை மிதமிஞ்சி வைத்து, சொந்தம் கொண்டாடக்கூடிய உரிமை பெற்றோருக்கு மிகமிகக் குறைவு. காரணம், என்றைக்கு இருந்தாலும் அவர்கள் வேறொரு இல்லத்திற்குச் சென்று வாழவேண்டியவர்கள்! பெண் பிள்ளைகளைப் பொருத்தவரையில், அவர்கள் தங்கள் மனதுக்குகந்த துணையைத் தேர்ந்தெடுத்து, அவனோடு இல்லறம் நடத்துவதே சிறந்த அறநெறி } நல்லறம் என்பதை உணர்ந்துவிட்டால், பிறகு, அவர்களுக்குத் தாய்-தந்தை பாசம் ஒரு பொருட்டாகத் தெரியாது. பாசம் என்ற கட்டுத்தறியை முறித்துக்கொண்டு - அறுத்துக்கொண்டு ஓடச்செய்யும் (உடன்போக்கு) சக்தி காதலுக்கு - களவு வாழ்க்கைக்கு உண்டு. அதனால், பெற்றோர் அவர்கள் மீது அளவோடு பாசம் வைக்க வேண்டியவர்களாகின்றனர். இப்படித்தான் சங்க இலக்கியத் தாய் ஒருத்தி, தன் மகள் மீது வைத்த மிதமிஞ்சிய பாசத்தால், புலம்பித் தவிக்கிறாள். தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணைவர

"கடிசொல் இல்லை காலத்துப் படினே'

Image
"கடிசொல் இல்லை காலத்துப் படினே' By   DN First Published :   31 May 2015 01:03 AM IST தமிழ் மொழி விசாலமடைய வேண்டும்   பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நம் நாட்டுப் பாஷைகளிலே வளர்வன வெல்லாவற்றிலும், உயிருள்ள பாஷைகளிலே உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதி, பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகரியப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், எழுத்தின் வரிவடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து, நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என் விருப்பம். -மகாகவி பாரதியார் தமிழைப் பேண வேண்டும்!    "தமிழில் பிறமொழிச் சொல் எதுவும் புகல் ஆகாது' எனப் புகல்வாரும் உளர். இது மொழி வளர்ச்சிக்குத் தடையாகும். புதிய கருத்துக்களும், பொருள்களும் சுட்ட, தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாளுவது தவறாகாது. ஆனால், அச்சொற்களைத் தமிழ் இயல்புக்கு இயையச் செப்பனிட்டுச் சேர்த்தல் வேண்டும். ஆன்ற பழந்தமிழ்ச் சான்றோர் இவ்வுண்மை அறிந்தே வடசொல், திசைச் சொற்களை விலக்காமல் தமிழில் கொண்டு வழங்கத்தக்க இயல்முறைகளைத் தம் மொழி நூலில் வ
Image
உணவு: உடலும் மனமும் சார்ந்தது By   dn First Published :   15 May 2015 04:15 PM IST புகைப்படங்கள் ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி'' - "ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும்' என்கிறார் சுவாமி பிரபுபாதா. அதனால், ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் அவசியமாகிறது. உணவும் மனமும் நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் தொடர்புண்டு என்கின்றன நம் சமய நூல்கள். ஒருவர் உண்ணும் உணவு உடல் (வலிமை), மனம், மலம் (கழிவுப் பொருள்) ஆகிய மூன்று கூறாக ஆகும் என்பதை திருமூலர் ஒரு பாடலில் கூறியுள்ளார். அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் பொருந்தும் உ