Posts

Showing posts from June 22, 2014

காதல் செய்து உய்மின்!

Image
உ சிவாய நம திருச்சிற்றம்பலம் மணிவாசகர் மலரடி போற்றி இடைமருதூர் கி.மஞ்சுளா காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே! (திரு.தி.பா.ப}5) இப்பாடலில், "பாண்டி' என்னும் சொல், இங்கே பாண்டியநாட்டு அரசனைக் குறிக்கும். அதாவது, சிவபெருமான், மலையத்துவசப் பாண்டியன் திருமகளாகிய மலைமகளை மணந்து சோமசுந்தரப் பாண்டியனாக வந்து, பாண்டிய நாட்டை ஆண்டதால், "பாண்டி' என்ற சொல், சோமசுந்தரப் பாண்டியனாகிய சிவபெருமானையே குறிக்கும். பத்துப் பாடல்கள் கொண்ட "திருப்பாண்டிப் பதிக'த்தில், பல இடங்களில் பாண்டியனார் என்ற சொல் வருகிறது. 5ஆவது பாடலில் "ஆலம் உண்டான் எங்கள் பாண்டிபிரான்' என்று வருவதால், இது சிவபெருமானையே குறிக்கும் என்பது தெளிவு. சிவபெருமான் முன்பொரு சமயம், கண்டவர் மனங்கவரும் வனப்புடன், ஒரு குதிரையின் மீது அமர்ந்து, பாண்டிய மன்னன் முன்வந்த திருவுருவச் சிறப்பை மணிவாசகப் பெருந்தகை பல இடங்களில் இப்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைப் ப