Posts

Showing posts from November 26, 2017

தர்மமும் அதர்மமும்

தர்மமும் அதர்மமும் 24.11. 2017 தினமணி இடைமருதூர் கி. மஞ்சுளா      முதலீடோ, மூலதனமோ   இல்லாத ஒரே தொழில்   பிச்சை எடுக்கும் தொழில்தான். முன்பெல்லாம் கோயில், தேவாலயம், தர்க்கா முதலிய புனிதத் தலங்களில் மட்டும்தான் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். ஆனால், இன்றைக்கு எல்லா இடங்களிலும் சுற்றித் திரிவதுடன்,   சாலையில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருக்கும்போதுகூடப் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.      அரசரும் புலவருமான அதிவீரராம பாண்டியன் என்பவர், இழிசெயலாக இருந்தாலும் "கல்வி' கற்பதற்காக பிச்சைகூட   எடுக்கலாம் (வெற்றிவேற்கை }35) என்று பாடிவைத்ததன் காரணம்,   கல்வி அறிவு பெறுவதன் அவசியத்தை வலியுறுத்தத்தான்.           மாற்றுத்திறனாளிகள்கூட ஏதாவது ஒரு பொருளை விற்பனை செய்து,   தன்மானத்தோடு வாழ்ந்து வரும்போது, எந்தவித உடற்குறைபாடும் இல்லாதவர்கள்கூட இப்போது பிச்சை எடுப்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. கிராமப் புறங்களில் விவசாயம் அழிந்து வருவதால், பிழைப்புத் தேடி நகர்ப்புறங்களுக்கு வருபவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கேயும் வேலை க

சிறுவர் மணி - அமைச்சரின் செருக்கை அடக்கிய நெல்

Image
அமைச்சரின் செருக்கை அடக்கிய நெல் ! -இடைமருதூர் கி.மஞ்சுளா                 வீரேந்திரன் என்றொரு மன்னன் " எழில்வனம் ' என்ற நாட்டை ஆண்டு வந்தான் . அவன் சிறந்த அரசாட்சி   செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தான் . ஆனால் , யார் எதைச் சொன்னாலும் அப்படியே அதை நம்பிவிடும் கள்ளம் கபடமற்ற அப்பாவியாகவும் இருந்தான் .   தன் மனம் மகிழும்படி யாராவது நடந்து கொண்டால் ,    உடனே அவர்களுக்கு ஒரு பொன் முடிப்பை ( பொற்காசுகள் ) பரிசளித்து மகிழ்வான் .                   அவனது அமைச்சரவையில் சித்தன்னன் என்ற   தலைமை அமைச்சன் ஒருவன் இருந்தான் .   கல்வி கேள்விகளில் சிறந்தவன் . பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவன் . அவனிடம் ,   கல்விச் செருக்கு சற்று அதிகமாகவே இருந்தது . எந்த ஒரு செயலைச் செய்தாலும் " இது என்னால்தான் நடந்தது , அதை நானே செய்து முடித்தேன் , இந்தச் செயலுக்கு நான்தான் காரணம் ' என்று எப்போதும் நான் , நான் என்று தன்னை முன்னிலைப் படுத்திக்கூறி கர்வப்பட்டுக் கொள்வான் .                 அந்த அமைச்சரவையில் சிவ