Posts

Showing posts from February 12, 2017

சாதகப் பறவையாய் இருங்கள் - நூல்

Image
சாதகப் பறவையாய் இருங்கள்   மற்றும் மீண்டு வாரா வழி ஆகிய   இரு நூல்கள் 2012 -  2013- இல் வெளிவந்ததாக நினைவு .  இந்நூல்களின் ஆசிரியரான எனக்கு   நான்கைந்து பிரதிகள் ( ஆப்செட் பிரதி )  கிடைத்தன . பதிப்பகத்தாரால் நூலக ஆணைக்கு அனுப்பப்பட்டுள்ளன . நூலக ஆணையும் கிடைத்திருக்கிறது ஆனால் ... இதுவரை விற்பனைக்கு வந்ததாகத் தெரியவில்லை . சாதகப் பறவையாய் இருங்கள் என்ற நூல் ,  ஆன்மீகக் களஞ்சியம் என்ற ஆன்மிக மாத இதழின் பொறுப்பாசிரியராக   -இணையாசிரியராக (10 ஆண்டுகள்) -   இருந்தபோது நான் படித்து ரசித்த இராமாயணம் , மகாபாரதம் , பாகவதம் , நபிகள் நாயகம்(ஸல்) வாழ்க்கை வரலாறு , சிவமகா புராணம் , விஷ்ணு புராணம், சூபி கதைகள் முதலிய பலவற்றிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை அதில் எழுதிவந்தேன். அக்கதைகளே இந்நூலில் உள்ளவை. மீண்டு வாரா வழி என்ற நூலில் – தினமணி வெள்ளிமணியில் வெளியான ஆன்மிகக் கட்டுரைகள் மற்றும் மணிவாசகரின் திருவாசகத் தொடர்களை வைத்து எழுதிய தனி கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நூலக ஆணை மட்டுமே கிடைத்தால் ஒரு நூல் சிறந்தாகிவிடாது. விற்பன

மண்ணடி மல்லிகேசுவரர் திருக்கோயில் தல வரலாறு

Image
தைப்பூசத்தன்று மண்ணடி ஸ்ரீமல்லிகேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா. காணக் கொடுத்து வைக்கவில்லை. என்னைக் கவர்ந்த சிவமூர்த்தங்களுள் ஸ்ரீமரகதாம்பாள் உடனுறை மல்லிகேசுவரர் மூர்த்தமும் ஒன்று. ஆம்… அவர் நிகழ்த்தும் அற்புதங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அதனால் அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அதற்கு நேரமும் வந்தது. அக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் ஒருவர் இந்தப் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சரியான தல வரலாறு கிடையாது. அதை நீங்கள்தான் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தி தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை, மல்லிகேசுவரரே கூறுவது போல சிரமேற்கொண்டு எழுத முயற்சி   செய்தேன். அதைத் திருவருள் முடித்துக் கொடுத்தது.  அதே கோயிலில் நூல் வெளியீடு, திரு வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட, திருவாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஐயா அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு அக்கோயிலிலேயே அமர்ந்து சிறப்புரை ஆற்றினார். அவரின் எளிவந்த தன்மை..... சிவபெருமானின் எளிவந்த தன்மையை விஞ்சியது. (பெரிய பெரிய அரங்கில் பேசிக்கூடியவர் அவர்)   அடியேனுக்காக வந்தது (நேரம் ஒதுக்கியது) ந