Posts

Showing posts from March 12, 2017

"கழகம்' - இனி வேண்டாம்!

Image
"கழகம்' -  இனி வேண்டாம்! -இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணி - தமிழ்மணி - 12.3.2017 ÷ "கழகம்' என்ற தமிழ்ச்சொல் பல பொருள்களை உணர்த்துகிறது. இச்சொல்லுக்கு வீரமாமுனிவரின் சதுரகராதி, "கல்வி, சூது, படை, மல்லிவை பயிலிடம்' எனவும்; பாலூர் கண்ணப்பரின் தமிழ் இலக்கிய அகராதி, "கல்வி பயில் இடம், சூது, சூதாடும் இடம், படை, மல் பயில் இடம், ஓலக்கம்(சபா மண்டபம்)' என்னும் சொற்களையும்; கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, "1. அரசு பிறப்பிக்கும் தனிச்சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட பொது நிறுவனம், (எ.கா. இந்திய உணவுக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம்), 2. ஒத்த கொள்கை, ஆர்வம் முதலியவை கொண்ட பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் ஓர் அமைப்பு (எ.கா. கம்பன் கழகம்)' என்னும் பொருள்களைத் தந்துள்ளன. திவாகர நிகண்டோ, ""மல்லும் சூதும் படையும் மற்றும் /  வல்லுநர் நாவலர் வாய்ந்த இடமும் / கல்விபயில் களமும் கழகமும் ஆகும்'' என்கிறது. ÷"கழகம்' என்பதற்கு மேற்குறித்த பல பொருள்கள் கூறப்பட்டிருப்பினும், குறிப்பாக அது சூது மற்றும் சூதாடும் இடத்தையே குறிக்கிறது எனலாம். இதை மற