Posts

Showing posts from 2016

விக்கிரமன் அவர்களின் ஆத்மாதான்

நண்பர்களே... உறவினர்களே... என்ன வியப்பு பாருங்களேன்...  சில மணித்துளிகளுக்கு முன்தான் திரு விக்கிரமன் அவர்களைப் பற்றிய பதிவை  முகநூலிலும் என் வலைப்பூவிலும் பதிவு செய்தேன். திடீரென்று இன்று ஏனோ அப்படிச் செய்யத் தோன்றியது. ஆனால், செய்யத் தூண்டியது யார்... திரு விக்கிரமன் அவர்கள் மறைந்தது டிசம்பர் மாதம் என்று தெரியும் ஆனால், நான் அவர் மறைந்த நாளை மறந்துவிட்டேன். சரியாக இன்று (டிசம்பர் -1) அவரைப் பற்றிப் பதிவு செய்ய வைத்தது யார்.... திரு விக்கிரமன் அவர்களின் ஆத்மாதான் போலிருக்கிறது. முகநூலில் நான் பதிவேற்றிய சிறிய நேரத்திற்கெல்லாம்   திரு.ராஜ்கண்ணன் அவர்கள் பார்த்துவிட்டு, படித்துவிட்டுக் கூறினார்.... இன்றுதான் அவருக்கு நினைவு அஞ்சலி நடைபெறுகிறது... உங்களுக்குத் தெரியாதா... என்று அவரும் என்னோடு சோகப்பட்டுக் கூறியபோது, நான் அதிர்ந்தே போனேன்.   ஆம், இன்றுதான் திரு விக்கிரமன் அவர்கள் எழுத்துலகை விட்டும் நம்மை எல்லாம் விட்டும் பிரிந்த சோகமான நாள். அதை இன்று எனக்கு நினைவூட்டி, என்னை எழுத வைத்தது அவரே... அவர் ஆத்மாவே என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்...... நல்ல ஆத்மாக்கள் ந

ஞாபகம் வருதே……

Image
ஞாபகம் வருதே…… டிசம்பர் மாதம் வந்தால் எழுத்துலக மாமேதை திரு.விக்கிரமன் அவர்களின் நினைவு வந்துவிடுகிறது. சென்ற ஆண்டு, சரித்திர நாவல் சிற்பி திரு விக்கிரமன் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் பலருடைய மனத்தை விட்டுப் பிரியாதவர். பாவம், அவருடைய இறுதி ஊர்வத்தில்கூட கலந்து கொள்ளமுடியாத நிலை (மழை வெள்ளத்தில் சென்னையே தத்தளித்துக் கொண்டிருந்த நேரம்..) பலருக்கும். அதில் நானும் ஒருத்தி.  அவர் மனைவி (திருமதி ராஜலட்சுமி அவர்களை நான் மாமி என்றுதான் அழைப்பேன்) அவர் இல்லம் செல்லும் போதெல்லாம்,   அன்போடு என்னை வரவேற்று, பலமுறை காப்பி பருகத் தந்தவர். அவரைப் பார்த்துகூட ஓர் ஆறுதல் வார்த்தை கூறமுடியவில்லை. எல்லாம் விதியின் சதியல்லாது வேறென்ன…  சமீபத்தில் ஒரு நாளிதழின் தீபாவளி மலரை விமர்சனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தபோது, அதில் திரு விக்கிரமன் சாரின் மனைவி திருமதி ராஜலட்சுமி விக்கிரமனின் “ஆடும் குதிரை” என்கிற சிறுகதையைப் படித்துவிட்டு இது அவர்தானா என்று அசந்தே போனேன். இவருக்குள் இப்படியொரு திறமை இருந்தது ஏன் இத்தனை ஆண்டுகளாக வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை…. கணவருக்குப

ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே...

Image
ஆவதும் பெண்ணாலே ... அழிவதும் பெண்ணாலே ... - இடைமருதூர் கி . மஞ்சுளா ÷ இந்த பூமியை புண்ணிய பூமி என்று நம் முன்னோர்கள் போற்றிப் புகழ்ந்து சொல்லி வைத்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை . நம் பாரத தேவியைப் பெண்ணாக உருவகப்படுத்தியுள்ளோம் . மண்ணைத் தாய்மண் என்றனர் . நதிகளையும் ஆறுகளையும் பெண்ணாக்கிப் பெருமைப்படுத்தினர் . நம் தாய்மொழியான தமிழைத்   தமிழ்த் தாயாக்கிப் பார்த்தனர் . இராமன் புகழ்பெற்றதும் , அல்லலுற்றதும் பெண்ணால்தான் ; இராவணன் அழிந்ததும் பெண்ணால்தான் ; வாலி மாண்டதும் பெண்ணால்தான் ; மதுரை எரிந்ததும் பெண்ணால்தான் . மகாபாரதம் தோன்றியதும் பெண்ணால்தான் . ஆதிசங்கரர் , ராமகிருஷ்ணர் , சுவாமி விவேகானந்தர் , பகவான் ஸ்ரீரமணர் , ராமானுஜர் - இப்படிப் பல " ஆண் ' ஞானிகளைப் பெற்றெடுத்து இப்பூவுலகுக்கு அளித்ததுப் பெருமை சேர்த்ததும் பெண் குலம்தான் . ÷ அதனால்தான் "" ஆவதும் பெண்ணாலே ; அழிவதும் பெண்ணாலே '' என்ற பழமொழி கூறினர் நம் முன்னோர் . இப்பழமொழிக்குப் பலரும் தவறாகவே இதுநாள் வரை பொருள் கொண்