Posts

Showing posts from March 27, 2016

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

Image
அனந்தபாரதியின்  நொண்டி நாடகம்!   தினமணி - தமிழ்மணி (20.3.16) by -  இடைமருதூர் கி.மஞ்சுளா       சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 என்பதை அறிவோம். ஆனால், பிற்காலத்தில் "சிந்து' என்ற ஒருவகை இசைப்பாட்டுத் தோன்றியுள்ளது. பள்ளு, நாடகம், குறவஞ்சி முதலிய பல நூல்கள் அவ்வகையில் தோன்றியவை. மாணிக்கவாசகர், தாயுமானவர், வள்ளலார் முதலியோர் ஞான நூல்களிலுள்ள ஆனந்தக் களிப்பும், இச்சிந்து என்னும் இசை நூல் வகையைச் சார்ந்ததே. நொண்டிச் சிந்து என்ற ஒரு சிந்தும் வழக்கிலிருந்து, பின் அது வழக்கொழிந்திருக்கிறது. சிந்து வகையைச் சார்ந்த இசை நூல்கள் பல 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இவை பற்றிய விளக்கங்கள் பழைய செய்யுள் இலக்கணமாகிய யாப்பருங்கலக்காரிகை போன்ற நூல்களில் காணப்படவில்லை. இசையோடு பாடும் வகையில் கவிஞர்களது கற்பனையில் தோன்றிய புதிய வகைச் சிந்துப் பாடல்கள் நாடகத் துறையைச் சேர்ந்தவை. அக்காலத்து மக்களால் அது போற்றப்பட்டு வந்துள்ளது என அறியமுடிகிறது. நொண்டிச்சிந்து வகையைச் சார்ந்ததே "திரு விடைமருதூர் நொண்டி நாடகம்' (இவ்வாறுதான் நூலின் தலைப்ப

நாம் அன்றாடம் பேசுவது தமிழா - 2

தினமணி - தமிழ்மணி - 27.3.2016 (தமிழ் மொழியோடு கலந்து தமிழ் போலவே வழங்கிவரும் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.) சம்ஸ்கிருதம் - தமிழ் அகங்காரம் - செருக்கு அதிர்ஷ்டம் - நற்பேறு அக்கிரமம் - முறைகேடு அத்தியாவசியம் - இன்றியமையாதது அநேகம் - பல அந்தரங்கம் - மறைவு அபிப்ராயம் - கருத்து அபூர்வம், அற்புதம் - புதுமை அர்த்தம் - பொருள் ஆட்சேபனை - தடை, மறுப்பு ஆரம்பம் - தொடக்கம் ஆராதனை - வழிபாடு ஆனந்தம் - மகிழ்ச்சி உற்சாகம் - ஊக்கம் உபயோகம் - பயன் கலாசாரம் - பண்பாடு கஷ்டம் - தொல்லை சங்கதி - செய்தி சதா - எப்போதும் சப்தம் - ஓசை சந்தேகம் - ஐயம் சந்தோஷம் - மகிழ்ச்சி சபதம் - சூளுரை சகஜம் - வழக்கம் சம்பந்தம் - தொடர்பு சம்மதி - ஒப்புக்கொள் சிகரம் - முகடு, மலையுச்சி, கொடுமுடி சிகிச்சை - மருத்துவம், பண்டுவம் சிகை - தலைமுடி, குடுமி, முடி சிங்கம் - அரிமா, மடங்கல் சிங்காரம் - ஒப்பனை சிசு - குழந்தை சித்தாந்தம் - கொண்முடிவு சித்தி - கைகூடுதல் சித்திரை - மேஷம் சிம்மாசனம் - அரியணை சிரஞ்சீவி - நீடுவாழ்வோன் சிரத்தை - அன்பு, அக்கறை, முயற்சி, சி

நாம் அன்றாடம் பேசுவது தமிழா.. 1

தினமணி - தமிழ்மணி 20.3.2016 அன்றாடம் நாம் தமிழ் எனக் கருதி வேற்றுமொழியை செழிப்படையச் செய்கிறோம் என்பதை இனிமேலாவது உணர்ந்து , தமிழ்மொழியைச் பேசியும் எழுதியும் செழிக்கச் செய்வோம் ! போர்த்துக்கீசியம் -  தமிழ்   அலமாரி - நெடும்பேழை கிராம்பு -  இலவங்கம் சாவி   - திறவுகோல் சன்னல் - சாளரம் , பலகணி மேஸ்திரி - தலைமைத் தொழிலாளர் , மேற்பார்வை கடுதாசி - யிடுவோர் . பேனா - தாள் , மடல் , கடிதம் மேஜை - எழுதுகோல் மேட்டி , மிசை வராந்தா - பணிப்பலகை சங்கடம் - தாழ்வாரம் அரபி - தமிழ் தகவல் - செய்தி வக்கீல் - வழக்குரைஞர் பாக்கி - நிலுவை மக்கர் - இடைஞ்சல் மாமூல் - பழைய படி மிட்டாய் - தீங்கட்டி மராத்தி - தமிழ் கில்லாடி - கொடியோன் அபாண்டம் - வீண்பழிக்கூற்று அட்டவணை   - பொருட்குறிப்புப் பட்டியல் பேட்டை – புறநகரம் தொகுப்பு – சிவமானசா (புனைபெயர்)   (இடைமருதூர் கி.மஞ்சுளா) சொற்கள் வளரும் ... ------- இப்பகுதிக்கு வாசகர்களிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்துள்ளன. நல்ல வரவேற்பு இ