Posts

Showing posts from September 10, 2017

லிஃப்ட் கொடுப்பவர் கவனத்திற்கு.... ஆபத்துக்குப் பாவம் உண்டு

Image
இடைமருதூர் கி . மஞ்சுளா " ஆபத்துக்குப் பாவம் இல்லை ' என்று கூறுவது முன்னோர் முதுமொழி . யாராவது ஆபத்தில் இருக்கிறார் என்றால் ,   அவர் யார் ? எவர் ? எப்படிப்பட்ட குணமுடையவர் ? எந்த சாதி ? எந்த மதம் ? என்றெல்லாம் பார்க்காமல் உடனடியாக   அவருக்கு உதவி செய்ய வேண்டும் ; இதில் பாவ } புண்ணியம் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முதுமொழியைச் சொல்லி வைத்தனர் நம் முன்னோர் . அவர்கள் கூறியதை இன்றைக்கு நம்மால் சில நேரங்களில் கடைப்பிடிக்க முடிகிறதா ? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது . நடைமுறைக்கு இது சாத்தியமில்லை என்றே பலரும் கூறக்கேட்க முடிகிறது . ÷ பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று " ஆசாரக்கோவை '. அந்நூலில் புலவரால் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிமுறைகளை இக்காலத்தில் ஒன்றைக்கூட நம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை } கடைப்பிடிக்கவும் முடியாது . காரணம் ,   எல்லாவற்றிலும் துரிதத்தைக் கையாண்டு ,   துரிதமாகவே இவ்வுலகை விட்டுச் சென்றிவிடும் காலச்சூழ்நிலையில் இருக்கிறோம் .   அதில் மேற்கூறிய முதுமொழி