Posts

Showing posts from June 18, 2017

சிறுவர் கதைக் களஞ்சியம் -செல்லாக் காசு -

Image
தினமணி சிறுவர் மணியில் வெளியான "செல்லாக்காசு" என்ற  சிறுகதையை சாகித்ய அகாதெமியினர் தேர்வு  செய்து "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்னும்  நூலில் இணைத்திருக்கிறார்கள்.  அந்தக் கதையை என்னை எழுதத் தூண்டியது என் தாய் - தந்தை என்னிடம் கொடுத்த அன்றைய  காசுகள்தான். படத்தைப் பாருங்கள் புரியும்.  மேலும் அந்நூல் குறித்த ஆய்வுரையும் வழங்க என்னைப் பணித்திருக்கிறார்கள் சாகித்ய அகாதெமியினர். அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்.... மகாகவி  பாரதியார் , மறைமலையடிகள், பாரதிதாசன், பெரிசாமித்தூரன், கி.வா.ஜ.,  அழ.வள்ளிப்பா, தமிழ்ஒளி, வானதி திருநாவுக்கரசு,  வாண்டுமாமா  முதலிய எழுத்து ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் உள்ளது நெஞ்சை நெகிழச் செய்கிறது. (தாய்-தந்தை என்னிடம் தந்துவிட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத சொத்து இவை. 1975களில் இந்தக் காசுகளை வைத்துப் பொருள்களை வாங்கிய அந்த அனுபவம்,  நினைவு நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது.

2ஆவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

Image
ஜூன் 9, 10, 11 மூன்று நாள்கள் முதல் நாள் சொல்லரங்கம் "ஒரு சொல் கேளீர்" தலைமை: பேராசிரியர் இராசகோபாலன், எஸ்.ஆர்.எஸ். பங்கேற்பு:  ஒரு சொல் முனைவர் யாழ் சு.சந்திரா (புலம்) முனைவர் க.பலராமன் (செல்வம்- திருக்குறளில்) இடைமருதூர் கி.மஞ்சுளா (நாய்- (திருவாசகத்தில்) தோழர் கன்னிக்கோயில் இராஜா,  தோழிகள் சக்தி ஜோதி , லலிதா மதியுடன் அடியேன். திருமதி வாசுகி கண்ணப்பன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களின் சகோதரி (பெயர் நினைவில்லை), இடைமருதூர் கி.மஞ்சுளா, செந்தாமரைக் கொடி(கவிஞர்)

சிறுவர் கதைக் களஞ்சியம்

Image