Posts

Showing posts from April 23, 2017

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

Image
தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும் - சைவத்தில்… (சைவ நெறி -அன்பு நெறி -   அருள்நெறி) இடைமருதூர் கி.மஞ்சுளா, எம்.ஏ., எம்ஃபில், . முன்னுரை        அன்பே கடவுள்   என்பதுதான் சைவத்தின் தலையாய மந்திரம். அன்பு, உயிரிரக்கம், ஜீவகாருண்யம், கருணை இவை அனைத்தும் சைவத்தின் ஒழுக்க நெறிகளாகும்.   சைவ சமயத்தின் தனிப்பெருங் கடவுளான அன்பே வடிவான சிவபெருமானை – ஆண்டவனை வணங்கும் அன்பர்கள், அவ்வன்பை இறைவனிடம் மட்டுமல்லாது, உலகில் உள்ள பிற உயிர்களிடமும் காட்டி, மனிதனாகப் பிறந்தவர்கள் தெய்வ நிலைக்கு உயரமுடியும் என்பதை வலியுறுத்தியது சைவ சமயம். கொல்லாமை, புலால் உண்ணாமையே சைவத்தின் ஒழுக்க நெறிகளுள் தலையாயது.   இந்நெறி வழி சைவத்தின் மாண்பையும், அன்பின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தின் அவசியத்தையும், தாவர உணவின் மகத்துவத்தையும் மேன்மைகளையும், தாவர உணவு தவிர்த்த புலால் உணவால் ஏற்படும் தீமைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். சமயமும் மதமும்        சமயம் வேறு, மதம் வேறு. மதம் என்னும் சொல், “கொள்கை ” என்னும் பொருளில் வழங்கி வருகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் “சமயம் ” என்ற