Posts

Showing posts from March 8, 2020

சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை...

Image
சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை... சென்ற ஆண்டு (9 முதல் 12 வரை 2019) இதே நாள்.. அந்தமானில் இருந்தது மறக்க முடியாத நிகழ்வு… இந்த அற்புத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் மூத்த சகோதரி கே.விஜயலெட்சுமிக்கு என் இன்ப அன்புடன் கூடிய நன்றிகள் பல… இன்று மட்டுமல்ல… என்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது அந்தமானின் அற்புதக் காட்சிகள்…. அந்தமானில் இறங்கியவுடனேயே செல்லுலர் சிறைக்குச் சென்றதும் மனம் இறுகிப்போய் கண்கள் குளமாயின….நாட்டின் சுதந்திரத்திற்காக அந்தச் சிறையில் எத்தனை விதமான துன்பங்கள் அடைந்தனர் நம் வீரர்கள்… தியாகிகள்… குறிப்பாக தியாகி… சாவர்கர். அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையை மட்டுமல்ல… இன்றைய சிறுவர்களும்.. இளைஞர்களும் அவசியம் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமான் சிறையைப் பார்வையிட வேண்டும்… அப்போதுதான் புரியும் நமக்குக் கிடைத்த சுதந்தரத்தின் அருமை பெருமைகள்…

கையெழுத்தில் திருவாசகம் - இடைமருதூர் கி.மஞ்சுளா (மணிவாசகப்பிரியா)நூல் (மானசீக) வெளியீடு

Image
8.3.2020 மகத்தான ஒரு நன்னாள்... என் வாழ்வில் ஒரு பொன்னாள்... மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை, நங்கைநல்லூர் சிவநேயப் பேரவையின் சார்பில் நடந்த மகளிர் விழாவில் சாதனை மகளிருக்கான விருதை வழங்கி கௌரவுக்கும் ( இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பேரவையில் " விருது பெற்ற நானும் , திருமதி வான்மதி அவர்களும் ) பெரும் பேறு கிடைத்தது . இந்நிகழ்ச்சில் ஸ்ரீலஸ்ரீ வாதவூரடிகளார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி அற்புதமாக நடைபெற்றது . கூடவே ... இந்த ஆண்டில் இறைவன் என் பொருட்டு நிகழ்த்திய ஓர் அற்புதத்தையும் அவர் திருமுன்பாகப் பதிவு செய்ய முடிந்தது என் பாக்கியம் . கடந்த 2019 டிசம்பரில் பட்டாபிராமில் நடந்த திருவாசக நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு . அருளரசு அவர்கள் திருவாசத்தைப் பற்றிக் கூறும்போது... இறைவன் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை எழுதியிருப்பார் .... நாம் தினமும் ஒரு பதிகத்தையாவது பாட வேண்டும்... கைப்பட எழுதிப் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன் மூலம் திருவருள் அவருள்ளிருந்து எனக்கு எழுதும் ஊக்கத