Posts

Showing posts from June 7, 2015

யார் இந்த ஜெயவிஜயா....

அனைத்து நண்பர்களுக்கும், இந்த வலைப்பூவை (அதிகம் இதில் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் அதையும்) வாசிக்கும் வாசக அன்பர்களுக்கும் வணக்கம். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வலைப்பூவுக்குள் நுழைந்துள்ளேன். காரணம், உங்களுக்கே தெரிந்திருந்திருக்கும், இருந்தாலும் சொல்லி விடுவது நல்லது. வேறு என்ன.... அலுவலகப் பணி மற்றும் முனைவர் பட்ட ஆய்வுதான். அப்படி என்னதான் இத்தனை ஆண்டுகளாய்...... செய்கிறீர்களோ என்று மனதுக்குள் நினைப்பது கேட்கிறது. என்ன செய்வது நான் எடுத்துக்கொண்ட தலைப்பும் ஆய்வும் அத்தகையது. இரு ஞான நூல்களைப் புரட்டிப்பாக்க சிறிதாவது ஞானம் வேண்டாமா..... மேலும், யார் இந்த ஜெயவிஜயா என்று ஒரிரு நாள்களுக்குப் பிறகு பலரும் கேட்கப் போகிறார்கள். ஜெயவிஜயா ஒருவர்தான். பெயரில் இருவர். இந்த இருவரும் ஒருவருக்கு மிக நெருக்கமானவர்கள். யோசித்து வையுங்கள் இரண்டொரு நாளில் இவர் யார் எனக் கூறுகிறேன். அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா

யாரிந்த ஜெயவிஜயா

வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன். மன்னிக்கவும். காரணம், இருக்கத்தானே செய்கிறது. பல ஆண்டுகளாக நான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த புனைபெயர்களுள் ஒன்று ஜெயவிஜயா. இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம் அது என் அம்மையின் தோழியர் இருவர் பெயர் என்பதால்தான். அம்மையா.... யாரவர்..... அந்த அம்மைக்குத் தோழியரா.... ஆம்! அவர்தான் நம் உயிருக்கு உரிமையுள்ள (உடலுக்கு உரிமையுள்ளவள் - நம்மைப் பெற்ற தாய்) மாதொருபாகனாகத் திகழும் பார்வதி தேவி. அவருடைய தோழிகள் பெயர்கள்தான் ஜெயா, விஜயா - ஜெயவிஜயா. இந்தப் பெயரில் எழுதவேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு நனவாகப் போகிறது. கூடிய விரைவில் இந்தப் புனைபெயருடன் உங்களுக்கு ஓர் இலக்கிய விருந்து படைக்க இருக்கிறேன். படித்து மகிழுங்கள். அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா