Posts

Showing posts from February 14, 2016

ஔவையின் பெட்டகம்

Image
  கட்டுரையாளர் - மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா) தினமணி - தமிழ்மணி - 14.2.2016   காவிரிக் கரையோரம் அமைந்துள்ள உறையூரில், வீரகோபாலன் என்பவன், தன் மனைவி பூங்கோதையை உயிராய்ப் போற்றி இல்லறம் நடத்தி வந்தான். பூங்கோதையோ நல்லறம் காக்கும் இல்லத்தரசியாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்டு விளங்குகிறாள். கட்டிய கணவனுக்கு துரோகம் இழைத்து, அவளது ஆசை நாயகனுடன் கூடும் மோகத்தால் "தீராத்தலைவலி' எனத் துடிக்கிறாள். இதைக் கண்ட கணவன், "இதற்கு மருந்து என்ன?' என்கிறான். ""கங்கைக் கரை முதலைக் குழி மண்ணும், வேங்கைப்புதர் மண்ணும் கலந்து பத்துப் போட்டால் தீரும்'' என்று மனைவி கூறியுவுடன் அவற்றைக் கொண்டுவர புறப்படுகிறான் வீரகோபலான். ÷சேர நாட்டுச் சத்திரத்திலே இரவு நேர ஓய்விலே இருந்த ஒüவையார், அவனது யாத்திரைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்து, ""உன் மனைவி பற்றி உன் எண்ணம் என்ன?'' என்கிறார். அதற்கு அவன், ""அவள் ஒரு "அருந்ததி'' என்றதும், அப்பெண்ணின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ஒüவை, அப்பெண்ணுக்குப்  பாடம் புகட்டி வீரகோபாலனைக் காப்