Posts

Showing posts from September 8, 2013

மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்

சிவாய நம திருச்சிற்றம்பலம் கட்டுரை வடிவாக்கம் - இடைமருதூர் கி.மஞ்சுளா காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் நிகழ்த்திய மணிவாசகப் பெருமான் குருபூஜையின்போது வெளியான மலரில் இடம்பெற்ற கட்டுரை இது. மணிவாசகப் பெருமான் எதைக்கண்டெல்லாம் அஞ்சினார், எதைக்கண்டு அஞ்சவில்லை என்பதை பெருந்தகை வாய்மொழியாகவே காண்போம். மணிவாசகர் மலரடி வாழ்க! மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும் அச்சம் என்பது அஞ்சுதல். அதாவது, சிவபெருமான் ஒருவனே தனிமுதற் பொருள் என் அறிந்து, அவனிடத்தில் அன்பு இல்லாதவரைக் காணும்போது, அவர்களது தொடர்பு உலக வாதனையைப் பயக்குமோ என அஞ்சுதல். திருவாசகத்தில் கூறப்பட்ட மற்ற 34 பதிகங்களிலும் (515 பாடல்கள்) கூறப்படாத சில கருத்துகள் 35-ஆவது பதிகமான அச்சப்பத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வச்ச ப்பத்துக்கு ஆனந்தம் உறுதல், அதாவது, நேயத்தில் ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்திமை என்பது பழைய குறிப்பு. இறைவன் ஒருவனே அறியத்தக்கவன், காணத்தக்கவன் என்ற உறுதியை விளக்குவதால் இப் பத்து ஆனந்தமுறுதல் ஆயிற்று என்பர். மூவர் முதலிகள் தேவாரம்் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சி