Posts

Showing posts from March 15, 2015

விவசாயிக்கு ஏற்பட்ட சிக்கல்

Image
சிக்கலும் தீர்வும் இந்தி மொழிபெயர்ப்பு: இடைமருதூர் கி.மஞ்சுளா ÷ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் மூத்த மகளை ஒரு குயவனுக்கும், இளைய மகளை ஒரு விவசாயிக்கும் திருமணம் செய்து வைத்தான். ÷ஒரு நாள் தம் இரண்டு பெண்களையும் பார்த்து விட்டு, அவர்கள் தொழில் எப்படி நடக்கின்றது என்று விசாரித்து வரலாம் என்று நினைத்த தந்தை, முதலில் மூத்த மகளின் வீட்டுக்குச் சென்றான். மகளைப் பார்த்து, ""மகிழ்ச்சியாக இருக்கிறாயா? உங்கள்  தொழிலெல்லாம் எப்படி நடக்கிறது?'' என்று விசாரித்தார். ÷அதற்கு அவள், ""இந்த முறை நிறைய உழைத்து நிறைய மண்பாண்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த ஆண்டு ஒருவேலை மழை பொழியவில்லை என்றால், எங்கள் வியாபாரம் இன்னும் நன்றாக நடக்கும். அதனால், இந்த ஆண்டு மழை பொழியக் கூடாது என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே'' என்றாள். அவரும் ""சரி மகளே, இந்த முறை மழை பொழியக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து இளைய மகள் வீட்டுக்கு வந்து, அவளிடம் நலம் வி