Posts

Showing posts from September 22, 2013

திரிமலம் தீர்த்த தேசிகன்

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஆக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா இக்கட்டுரை அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் (காவேரிப்பாக்கம்)  17.1.2011 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த கண்ணப்பர் திருநாளில் வெளியிடப்பட்ட திருவருணை "பால் சுவாமிகள்"  தெய்வத்திரு பொன்னுசாமி அடிகளாரின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மலரரில் வெளியானது. மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால் என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத் திரிமலம் தீர்த்த தேசிக! அருணந்தி சிவமும் இருபா இருபஃதும்:    சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று இருபா இருபஃது. இந்நூல் அருணநந்தி சிவாசாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. இவரு காலம் 1222-க்குச் சில ஆண்டுகள் பின்பு என்று கூறுவர். இருபா -இரண்டு வகைப்பா, இருபஃது -  20 பாடல்கள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆகிய இரண்டும் மாறிமாறி வர, அவ்வகையில் 20 பாடல்களைக் கொண்டது. அதாவது, வெண்பா ப10, ஆசிரியப்பா 10. மெய்கண்ட சாத்திரத்தில், பா வகையிலும் தொகை வகையிலும் பெயர் பெற்ற நூல் இது ஒன்றேயாகும். மேலும், அந்தாதித் தொடையிலும் அமைந்தது. சைவ சித்தாந்தச் செந்நெறியில் காணப்பெறும