Posts

Showing posts from April 12, 2015

ஒலி கேட்டால் உள்ளம் உறங்குமோ...?

"சைவத் தமிழ்ச்சிந்தையர்' "சித்தாந்த இரத்தினம்' இடைமருதூர் கி.மஞ்சுளா (மும்பையிலிருந்து வெளியாகும் காலநிர்ணய் என்ற நாள்காட்டியில் வெளியான கட்டுரை ) பொருள் தேடச் சென்ற தலைவன் திரும்ப காலதாமதமானது. தலைவி பிரிவுத் துயரால் வாடுகிறாள். இவளது பிரிவுத் துயரை, ""வண்ணம் பசந்து புலம்புறு காலை, உணர்ந்த போல, உறுப்பினைக் கிழவி, புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே'' (தொல்.கள.1145) தலைவி தன் உடம்பின் நிறம் வேறுபட்டு வருத்தம் அடையும் காலத்து, தலைவன் பிரிவைத் தன் உறுப்புகள் அறிந்ததைப்போல பொருந்தும் வகையில் சொல்லுதலும் உண்டு. அவ்வாறு வாடினால் அதற்கு வடிகாலாய் இருப்பவள் உற்ற தோழிதான்! உடனே அவளிடம் சொல்லிப் புலம்புவாள். ""அன்புறு தகுவன இறைச்சியுள் கட்டலும் வன்புறை ஆகும், வருந்திய பொழுதே'' (நூற்பா}1173) தலைவனுடைய பிரிவுக்கு ஆற்றாது தலைவி வருந்தும் காலத்து, தலைவன் அன்பு கொள்ளத்தக்க கருத்துக்களைக் கருப்பொருளின் உட்பொருள் வகையால் (உள்ளுறை, இறைச்சி) குறித்தலும் வற்புறுத்தல் வகையிலேயே முடியும் என்பது தொல்காப்பியம். அக்காலத்தில் பெரும்பாலும் பல