Posts

Showing posts from 2014

திருப்பூர் அரிமா சங்க சக்தி 2014 விருதாளர்கள்

பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது * 25/12/2014 : மாலை 5 மணி* மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பேங்க் காலனி,காந்திநக்ர், திருப்பூர் தலைமை: அரிமா பிரதீப்குமார்பங்கேற்பு: சுப்ரபாரதிமணியன், சி.ரவி, கேபிகே செல்வராஜ் ( முத்தமிழ்ச் சங்கம் ) அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன், முருகசாமி, கோபால் வழங்கப்படும் விருதுகள்:1. அரிமா குறும்பட விருது -4 பேருக்கு2. அரிமா ஆவணப்பட விருது -3 பேருக்கு3. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )-22 பேருக்குவருக ( 944 355 9215 ) “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ” * அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது : 1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் ) 2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா ) 3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why ) 4.மதரா , திருனெல்வேலி ( கதவு ) 5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” ) * சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு 1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா *. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது ) 1. .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் (

சலங்கை பூஜை - பாபாஞ்சலி

Image
திருச்சிற்றம்பலம் பாபாஞ்சலியின் நடனாஞ்சலி பாபாஞ்சலி கலைக்கோயில் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த 23-11-2014 ஞாயிறு மாலை சென்னை அயினாவரம் அன்னை மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது . திருவாசகப்பாடலே இறைவணக்கப்பாடலாக ஒலித்தது . பாரம்பரிய முறைப்படி புஷ்பாஞ்சலியோடு துவங்கிய நிகழ்ச்சி அப்பர் சுவாமிகளின் திருவங்க மாலையினை நாட்டியத்தின் மூலம் காட்சிப்படுத்தியது யாவும் அருமை . செல்வி பவானி சக மாணவிகளோடு இணைந்து ஆடிக்காட்டிய   சுந்தரரின் வரலாறு சிறப்புடன் அமைந்தது . நிறைவாக திருவாசகத்தின் சாரமாகத்திகழும் சிவபுராணத்திற்கு மாணவியரோடு இணைந்து குரு . திருவடிச்சிலம்பன் அபிநயித்தது பார்வையாளர்களை மெய் மறக்கச்செய்தது . அப்போது அங்கு கூடியிருந்த கலைஞர்கள் பெற்றோர்கள் என யாவரும் சிவபுராணத்தை இசைத்து மகிழ்ந்தனர் . இக்கலைச்சேவையின் மூலம் தெய்வீகத்தமிழை எல்லோர் மனதிலும் பதியச்செய்வதே பாபாஞ்சலியின் நோக்கம் என்றார் அதன் இயக்குனர் திருவடிச்சிலம்பன் . விழாவில் சிவலோகம் திவாகர் மஹராஜ் மற்றும் இடைமருதூர் மஞ்சுளா அம்ம

புலவர் பதுமனாரின்

பெருமதிப்பிற்குரிய, பேரன்பிற்குரிய புலவர் பதுமானார் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் (இன்று-7.11.2014) வந்திருந்தது. அவர் கையால் நன்றி மாலைகளைச் சூட்டிக்கொண்டதில் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறேன். இப்படிப்பட்ட பெரியோரின் ஆசிர்வாதங்கள்தான் என்னையும் என் எழுத்துத் திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன். இது என் தமிழன்னைக்கும் நான் கற்ற சமயக் கல்விக்கும் கிடைத்த பரிசு. அதற்கு வழி அமைத்துக் கொடுத்த தினமணிக்கு என் பணிவான வணக்கங்கள் பல. புலவர் பதுமனார் அவர்கள் எழுதிய கடிதத்தைப் படியுங்கள். எழுத்துக்களால் செதுக்கிச் செதுக்கி படிப்பவரை உருக வைத்துள்ளார். அவருக்கு என் பணிவான வணக்கங்கள் - நன்றிகள். புலவர் பதுமனாரின் கடிதத்தில் உள்ள முத்துக்கள் இவை பெறுநர்: இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் பேரன்புடையீர்… வணக்கம். “அபாயம் வராமல் இருக்க உபாயம்” என்னும் கட்டுரையை 31.10.2014 அன்று வெளியான வெள்ளிமணியில் கண்டேன். உவகை கொண்டேன். கட்டுரையைக் கவினுற வழங்கிய கலைபயில் செல்வமாகிய தாங்கள் (இடைமருதூர் கி.மஞ்சுளா) தினமணிக்கு வாய்த்த திருமாமணியென்றே போற்றி மகிழ்கிறேன். “சொல்லின் என்ன இர

வாரியாரின் வாரிசாம்....

தினமணி வாசகரும் என் நட்பிற்கு உரியவருமான பெரியவர் கவிஞர் அ.வெ. முல்லை நிலவழகன் அவர்கள். இவர் வானளாவிய தமிழ்ப் பேரவை என்ற ஓர் அமைப்பின் நிறுவனர். தினமணியில் என்னுடைய படைப்புகளைப் படித்துவிட்டு மிகவும் வியந்து போவார். காரணம், உங்களுடைய மொழி நடை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஆன்மிகக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், நேர்காணல், ஆராய்ச்சி இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலும் உங்களால் எப்படி இப்படி ஆழங்கால்பட்டு எழுதமுடிகிறது என்பதுதான் அவருடைய முதல் கேள்வியாக இருக்கும். என் படைப்புகளைப் பத்திரிகையில் பார்த்த அன்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் பல தமிழறிஞர்களுள் முல்லை நிலவழகன் குறிப்பிடத்தக்கவர். அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தினமணி வெள்ளிமணியில் வெளியான அபாயம் வராமல் இருக்க உபாயம் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு வியந்து வியந்து போய் தொலைபேசியில் பேசித் தீர்த்தவர். உடனே ஒரு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே படியுங்கள் வணக்கம். நாத்திகம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், நாத்திகத் தலைவர்களின் பேச்சுக்கு எவரும் ஈடுகொடுக்க ம

எது உழவாரப் பணி?

Image
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், "தாண்டக வேந்தர்' என்று போற்றப்படுபவர். மருணீக்கியராக இருந்த இவருக்கு சிவபெருமான் சூட்டிய பெயர் நாவுக்கரசர். "வாகீசர்' என்ற பெயரும் உண்டு. "அப்பர்' என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து ("ஓம் நமசிவாய - மந்திரத்தை) படைக்கலத்தை நாவிலும், "உழவாரம்' என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர். அவர் செய்த உழவாரப்பணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதைக் காண்போம். திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார். ÷சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான், சகோதரி திலவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து, மனம் நொந்து சில காலம் சமண சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார். சிவபக்தையான திகவதியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் திருவருளால் அவர் மீண்டும

இடைமருதூர் கி.மஞ்சுளா பற்றி.....

Image
இடைமருதூர் கி.மஞ்சுளாவைப் பற்றிய சிறு குறிப்பு....... வேதாரண்யம் அருகில் உள்ள கரும்பம்பலம் என்ற சிற்றூரில் 1969-ஆம் ஆண்டு பிறந்தவர். தாய்-எஸ்.கல்யாணி (அரசுப் பள்ளி நூலகர், இந்தி பண்டிதர்-ஓய்வு), தந்தை-கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்).  ஆரம்பக் கல்வியை சுவாமிமலை மூலப்பள்ளி என்னும் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை (9,10-ஆம் வகுப்பு) சுவாமிமலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 11, மற்றும் 12-ஆம் வகுப்பை திருவிடைமருதூர் (இடைமருதூர்), திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் (தமிழ் இலக்கியம்), எம்.ஏ.,(தமிழ் இலக்கியம்), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பயின்றவர். இளம் முனைவர் (எம்ஃபில்)பட்டத்திற்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு திருவாசகத்தில் மகளிர் ஆடல். முதல் இடத்தில் தேர்வு பெற்ற இந்த ஆய்வேடு, தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு 2005-ஆம் ஆண்டு நூலாக வெளிவந்ததுள்ளது. தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட(திருவாசகம் தொடர்பாக)  ஆய்வு செய்து வருகிறார்.   தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிக

மணிக்கவாசகப் பெருமான் குருபூஜை

Image
வணக்கம் அன்பர்களே, வாசகப் பெருமக்களே.... மீண்டும் ஒரு குருபூஜை செய்தியோடு உங்களைச் சந்திக்கிறேன். நேற்று (2.7.2014) காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் ஆனி மக நன்னாளான மணிவாசகர் குருபூஜையை முன்னிட்டு திருவாசகம், திருப்பாண்டிப்பதிகம் பதிகம் நூல் வெளியிடப்பட்டது. இதில் அம்மன்றத்தின் அமைப்புச் செயலாளரான திரு. இரா சச்சிதானந்தம் அவர்கள் (90 தள்ளாத வயதிலும் மாணிக்கவாசகருக்காக அயராத அன்போடு உழைக்கிறார்), திருப்பாண்டிப்பதிகம், மலரை வெளியிட்டு வாழ்த்தி. மூலபண்டாரம் என்ற தலைப்பில் உரையாற்றியவர், திருவாசகச் செம்மணி திரு. எ.வேலாயுதனார் அவர்கள், முதல் படியைப் பெற்று இன்ப வெள்ளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியவர் இடைமருதூர் க.மஞ்சுளா அவர்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமேற்று, ஒருவன் என்னும் ஒருவன் என்ற தலைப்பில் தலைமையுரை ஆற்றியவர் திருமுறைச் செம்மணி திரு. ஆ. அருளரசு அவர்கள். காலையில் திருவாசகம் முற்றோதலும், மாலையில், ஓதுவார்களின் திருமுறை விண்ணப்பம் மற்றும் சிந்தைக்கினிய திருவாசகச் சொற்பொழிவுகளும் இனிதே நடைபெற்றன. அடியேன் இந்த குருபூஜையில் கலந்துகொண்டு திருப்ப

காதல் செய்து உய்மின்!

Image
உ சிவாய நம திருச்சிற்றம்பலம் மணிவாசகர் மலரடி போற்றி இடைமருதூர் கி.மஞ்சுளா காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான் எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே! (திரு.தி.பா.ப}5) இப்பாடலில், "பாண்டி' என்னும் சொல், இங்கே பாண்டியநாட்டு அரசனைக் குறிக்கும். அதாவது, சிவபெருமான், மலையத்துவசப் பாண்டியன் திருமகளாகிய மலைமகளை மணந்து சோமசுந்தரப் பாண்டியனாக வந்து, பாண்டிய நாட்டை ஆண்டதால், "பாண்டி' என்ற சொல், சோமசுந்தரப் பாண்டியனாகிய சிவபெருமானையே குறிக்கும். பத்துப் பாடல்கள் கொண்ட "திருப்பாண்டிப் பதிக'த்தில், பல இடங்களில் பாண்டியனார் என்ற சொல் வருகிறது. 5ஆவது பாடலில் "ஆலம் உண்டான் எங்கள் பாண்டிபிரான்' என்று வருவதால், இது சிவபெருமானையே குறிக்கும் என்பது தெளிவு. சிவபெருமான் முன்பொரு சமயம், கண்டவர் மனங்கவரும் வனப்புடன், ஒரு குதிரையின் மீது அமர்ந்து, பாண்டிய மன்னன் முன்வந்த திருவுருவச் சிறப்பை மணிவாசகப் பெருந்தகை பல இடங்களில் இப்பதிகத்தில் அருளிச் செய்துள்ளார். இறைவனைப் ப

ராதா நாமம் சொல்லிக் கொடுத்தேன்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்! (தினமணி வெள்ளிமணியில் வெளியான கட்டுரை) ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை "கோகுலாஷ்டமி' என்று கொண்டாடி வருகிறோம். கண்ணனின் அவதார நோக்கமும் தத்துவமும் பற்றி அறிந்து கொண்டால், கண்ணனின் பிறப்பு சில பாடங்களைத் தரும். கண்ணனும் நீலவண்ணமும்: கண்ணன், கார்மேக வண்ணன், நீலநிறவண்ணன் என்று வர்ணிக்கப்படுகிறார். எங்கும் நிறைந்து பரந்து விரிந்திருப்பதற்குத் தோற்றத்தளவில் நீலநிறம் வருவது இயல்பு. அது அறிவியல் தொடர்புடையதும்கூட. மலை, கடல், வெட்டவெளி போன்றவற்றில் தென்படுகின்ற இயற்கை போன்று, தென்படாத பரம புருஷன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதுதான் கிருஷ்ணனின் நிறத்துக்கான தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு "சர்வ வியாபி... (எங்கும் நீக்கமற நிறைந்தவன்') என்று பொருள். அவதாரம் தேவையா? ""அவதாரம் எடுக்காமலேயே நான் எந்தக் காரியத்தையும் நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு உயிரினத்தின் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் அவதாரம் எடுக்கிறேன். பூமியில் அவதாரம் எடுக்கும்போது, என்னை தரிசனம் செய்வதால், அவர்கள் மனக்குறை தீர்க்கப்படுகிறது. என்ன

தமிழ் முக்தி இன்பம்

தமிழ் - முத்தி இன்பம்! ÷"இன்பம்' என்பது இல்லாத ஒரு பொருளன்று. அது ஆன்ம உணர்வுக்குப் பொருள் (விஷயம்) ஆவதுதான். இன்பம் என்பது ""எல்லாம் அற என்னை இழந்த நலம்'' (கந்தரநுபூதி) ஆகும். எல்லாம் அற்ற இடத்துக்குப் "பாழ்' என்று ஒரு பொருளுண்டு. ""முப்பாழும் பாழாய், முடிவில் ஒரு சூனியமாய், அப்பாழும் யாழ் என்றறி'' என்னும் தொடர் மூன்று மலப் பொருள்களும் (ஆணவம், கன்மம், மாயை) பாழாகி, ஆன்மாவும் இல்லாததாகி, அப்பொருளதாகிய சிவமும் தோன்றாத, இன்பநிலை என்பதை அறிவாயாக என்று பொருள்படும். "பாழ்' என்னும் சொல்லில் உள்ள "ழ' கரத்துக்கே "இன்பம்' (ஆனந்தம்) என்னும் பொருள் இருக்கிறது. ÷"தமிழ்' என்னும் சொல்லிலும் "ழ'கரம் உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ்மொழி ஒன்றில்தான் "ழ'கரம் உள்ளது. "தமிழ்' என்னும் சொல்லில் இதன் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். த - த் + அ. த் - தகராகாசம்; அ - இறைவன் (பரமான்மா). மி - மாயையொடு கூடிய உயிர் (ஜீவான்மா). ழ் - (இறைவனும் ஆன்மாவும் சேர்ந்தபோது உண்டாகின்ற) இன்பம். ÷ஆக

மறக்க முடியுமா....

÷ ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல; அவர் வாழ்ந்த காலத்தில் இந்த உலகுக்கு எதை விட்டுச்சென்றார் என்பதுதான் முக்கியம். ஆடு, மாடுகள் கூடத்தான் ஆண்டாண்டு காலங்கள் வாழ்கின்றன. ஆனால், மனிதனாகப் பிறந்தவன் இந்த பூமியில் தான் வந்ததற்கான அடையாளத்தை எந்த வகையிலாவதுப் பதிவுசெய்ய - விட்டுச்செல்ல வேண்டும். அந்த வகையில், மிகக் குறுகிய காலமே வாழ்ந்த திரையிசைக் கவிஞரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதற்காக விட்டுச்சென்ற தத்துவங்கள் ஏராளம்.. ஏராளம்.... ÷ 19 வயதிலேயே கவிபாடத் தொடங்கிய அந்தக் கானக்குயிலின் கருப்பொருள்கள், அரசியல், தத்துவம், பாட்டாளிகளின் குரல், இறைமை, நாடு, கதை, நகைச்சுவை, சமூகம், சோகம், இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, கோபம், பொது எனப் பரந்து விரிந்தது ஒலித்தது. ÷எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயதில் விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும், திராவிட இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய இந்தப் பாட்டுக்குயில், விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத் தொழில், நாடக நடிகர், பாடலாசிரியர் என 17 வகையானத் தொழில்களை 29 வயதுக்குள்ளாவே செய்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு....

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாசகப் பெருமக்களே, நண்பர்களே, உறவினர்களே.... முதற்கண் வணக்கம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களைச் சந்திக்கிறேன். காரணம் பத்திரிகைப் பணி. சிவ அன்பர்கள், நண்பர்கள் தரும் வேண்டுகோள் (கட்டுரை வரைந்து தரவேண்டி). தட்டமுடியவில்லை. இதற்கிடையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வேறு. மேலும், வாசி, கே.எம்.வி., மணிவாசகப்பிரியா, பிஞ்ஞகன், ராதாவனமாலி, ஜோதிமகாலிங்கம், ஏகம்பர் நாயகி, பரிபூர்ணா, சிவமானசா, தகவல் தேனீ, கந்தழி, தாசரதி, தமிழ்ப்பிரேமி, ஹரிஹரசுதா, வேம்புமகள் முதலிய பல புனைபெயர்களளில் கட்டுரைகள் எழுதவேண்டியுள்ளது. அப்பப்பா..... இத்தனை புனைபெயர்களா.... எனகிறீர்களா.... என்ன செய்வது... இப்படிக் கட்டுரைகள் எழுதி பலரது மாற்றுக் கருத்துகளிலிருந்தும் பார்வையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கிறதே.... அதுபோகட்டும். சமீபத்தில் அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா (16.2.2014) நிகழ்ச்சியில் நூலின் முதல் பிரிதியை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தினத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, "கழல் பேணுதல்" என்ற தலைப்பில் சிற