Posts

Showing posts from January 7, 2018

சென்னை கம்பன் கழகம் வழங்கிய "தமிழ் நிதி" விருது

Image
சென்னைக் கம்பன் கழகமும் , ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய , கம்பனில்   ஆழங்கண்ட வேழம் தொடர் நிகழ்ச்சி நேற்று (9.1.2018) மாலை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழ்ந்தது .  அந்த நிகழ்வில் முனைவர் இடைமருதூர் மஞ்சுளா அவர்கள் தமிழ்நிதி விருது பெற்றார் . முனைவர் தெ . ஞானசுந்தரம் அவர்கள் ரா . பி . சேதுப்பிள்ளை பற்றி சிறப்புரை ஆற்றினார் . திரு கோ . சரவணன் அவர்கள் மந்தரைப் பற்றி சிற்றுரை நிகழ்த்தினார் .  உடன் கம்பன் கழக செயலர் இலக்கியவீதி இனியவன் அவர்கள் . இணைச் செயலர் (நிரலுரை ஆற்றிய)  முனைவர் சாரதா நம்பி ஆரூரன்   அவர்கள் .  பேராசிரியர் திரு.ராம குருநாதன், திரு தெ.ஞானசுந்தரம்,  பள்ளத்தூர் பழ.பழநியப்பன்,   இலக்கிய வீதி திரு. இனியன், திரு. ராஜ்கண்ணன்.  மற்றும் திரு மலர் மகன், இடைமருதூர் கி.மஞ்சுளா, கவிஞர் சி.மகேஸ்வரி. பங்கேற்றோர் திரு.மலர் மகன், கவிஞர் முத்துலிங்கம், வாசுகி பத்திரி உள்ளிட்டோர்....

இசைத் தமிழ் உலகின் நக்கீரர்!

Image
இசைத் தமிழ் உலகின் நக்கீரர்! by. இடைமருதூர் கி . மஞ்சுளா first bublished - தினமணி கதிர் – 7.8.2018 ÷ இசைக்கும் , இசைத்தமிழுக்கும் ஏற்றம் தந்த இசைப் பேராசிரியர் , இசையாசிரியர் , இசை நூலாசிரியர்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் டி . ஏ . சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் ஆவார் . ஆனால் , பலரும் இவரைக் குறிப்பிடாததற்கு , நினைவுகூராததற்குக் காரணம் என்ன ? என்கிற வினா எழக்கூடும் . அதற்கு விடை : இசை தொடர்பான நூலிலோ , எழுத்திலோ , ராகத்திலோ , தாளத்திலோ , ஜதியிலோ , சுருதி பேதத்திலோ குற்றம் கண்டவிடத்து இவர் தமிழ்ப் புலவர் நக்கீரர் போல நேருக்கு நேராகக் " குற்றம் குற்றமே ' என்று சாடியதனால்தான் என்பதை அறிய முடிகிறது . அதாவது , இசைத்தமிழ் உலகில் இவர் நக்கீரராக இருந்ததால்தான் இவரைப் பலரும் புறந்தள்ளிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறார் சம்பந்தமூர்த்தியின் மகன் டி . ஏ . எஸ் . சகஸ்ரநாமம் . இவருடைய கூற்றை மெய்ப்பிப்பது போல , " இசைத் தமிழ் உலகின் நக்கீரன் ' என இன்னிசைக் கவிமணி இளங்கம்பனால் கவிபுனைந்து போற்றப்பட்டிருக்