Posts

Showing posts from 2013

மணிவாசகரின் முத்தான மணிமொழிகள்...பத்து...

Image
மணிவாசகப் பெருந்தகையின் மணிமொழிகளைக் கற்போம், இறைவனின் - சிவபெருமானின் அருமை பெருமைகளை அறிவோம், அடியார்களின் இணக்கத்தை நாடுவோம்.... கன்றைப் பிரிந்த - இழந்த  பசுவைப் போல  கசிந்து கண்ணீர் மல்கி இறைவனின் திருவருளுக்காக ஏங்கித் தவிப்போம்....இந்த ஏக்கமே நமக்கு வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும். இறைவனுக்காக மட்டுமே ஏங்குவோம்....  இங்கு காட்சியளிப்பவர் இடைமருதூர் ஜோதி மகாலிங்கப் பெருமான்.  இடைமருதன் இருக்க இனி இடையூறுகள் ஏது..... 1. கடவுளின்  இருப்பினை உணர்ந்தவர் ஜாதி பேதம் பார்க்க மாட்டார்கள். யாராவது ஜாதி பேதம் பாராட்டுகிறார்கள் என்றால்,  அவர்கள் இன்னும் கடவுள் இருப்பை உணரவில்லை என்பது பொருள். 2. அரசனாகிய என் இறைவனே! பொன்னம்பலத்திலே கூத்தாடும் என் பேரமுதே! என்று உளமார நினைத்து, வாயாற வாழ்த்தி நின் திருவடியினையே நோக்கி நின்றேன். அங்ஙனம் நிற்கும் அடியேன் நிலை, தக்க இறை நெருங்கி வருமாறும் கொக்கின் நிலையைப் போல் இருந்தது. 3. இறைவன் தன்னை ஆட்கொண்டவுடன் அறியாமைக் குணம், தமர் - பிறர் என்ற பாகுபாட்டு உணர்வு,  யான் என்ற செருக்கு,  எனது எனும் பற்று ஆகிய அனைத்தும் நீங்கிப்போன அருமையை உணரலாம

மன அமைதி வேண்டுமா....

Image
"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி:  பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள். அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில்  ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான் . இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வாசித

திரிமலம் தீர்த்த தேசிகன்

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் ஆக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா இக்கட்டுரை அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் (காவேரிப்பாக்கம்)  17.1.2011 திங்கட்கிழமை அன்று நிகழ்ந்த கண்ணப்பர் திருநாளில் வெளியிடப்பட்ட திருவருணை "பால் சுவாமிகள்"  தெய்வத்திரு பொன்னுசாமி அடிகளாரின் 20-ஆம் ஆண்டு ஆராதனை மலரரில் வெளியானது. மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அந்நியம் ஆக்கி அருள்வழி அதனால் என்னுள் புகுந்தனைச எனினே, முன்னைத் திரிமலம் தீர்த்த தேசிக! அருணந்தி சிவமும் இருபா இருபஃதும்:    சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று இருபா இருபஃது. இந்நூல் அருணநந்தி சிவாசாரியாரால் அருளிச் செய்யப்பட்டது. இவரு காலம் 1222-க்குச் சில ஆண்டுகள் பின்பு என்று கூறுவர். இருபா -இரண்டு வகைப்பா, இருபஃது -  20 பாடல்கள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஆகிய இரண்டும் மாறிமாறி வர, அவ்வகையில் 20 பாடல்களைக் கொண்டது. அதாவது, வெண்பா ப10, ஆசிரியப்பா 10. மெய்கண்ட சாத்திரத்தில், பா வகையிலும் தொகை வகையிலும் பெயர் பெற்ற நூல் இது ஒன்றேயாகும். மேலும், அந்தாதித் தொடையிலும் அமைந்தது. சைவ சித்தாந்தச் செந்நெறியில் காணப்பெறும
Image
சிவாய நம திருச்சிற்றம்பலம்    கட்டுரையாளர் இடைமருதூர் கி.மஞ்சுளா ( காவேரிப்பாக்கம், அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம்  மணிவாசகர் குருபூஜை (2013) நாள் மலரில் இடம்பெற்ற கட்டுரை) யானாகி நின்றான் எச்சம்மறி வேன்நான் எனக் கிருக்கின்றதை அறியேன் அச்சோ வெங்கள் அரனே! அருமருந்தே! எனதமுதே! செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் நிச்சம் என நெஞ்சின்மன்னி யானாகி நின்றானே!                                                                              (திருவாசகம்., உயிருண்ணிப் பத்து, பா.10)  மணிவாசகப் பெருந்தகை, உயிருண்ணிப் பத்து பதிகத்தை சிவானந்த மேலீட்டால் பாடியுள்ளார். மணிவாசகர் திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருக்கின்ற காலத்தில் இறைவன் ஊனார் உயிர் கலந்து உள்ளத்தை விட்டுப் பிரியாது பேரின்பத்திருத்திய பெற்றியால் திளைத்து, அவ்வனுபவ அதிசயங்களை இப்பத்துப் பாடல்களாலும் அருளிச் செய்துள்ளார்கள் என்பது தண்டபாணி தேசிகர் உரை விளக்கம். உயிருண்ணிப் பத்து 9-ஆவது பாடலின் மூலம், சிவபரம்பொருள் மாணிக்கவாசகராவே (யானாகி) ஆகிநின்ற தன்மையை விளக்கியுள்ளார். இப்பாடலின் மூலம் சைவ சித்தாந்தப் பேருண

மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்

சிவாய நம திருச்சிற்றம்பலம் கட்டுரை வடிவாக்கம் - இடைமருதூர் கி.மஞ்சுளா காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் நிகழ்த்திய மணிவாசகப் பெருமான் குருபூஜையின்போது வெளியான மலரில் இடம்பெற்ற கட்டுரை இது. மணிவாசகப் பெருமான் எதைக்கண்டெல்லாம் அஞ்சினார், எதைக்கண்டு அஞ்சவில்லை என்பதை பெருந்தகை வாய்மொழியாகவே காண்போம். மணிவாசகர் மலரடி வாழ்க! மணிவாசகரின் அஞ்சாமையும் அச்சமும் அச்சம் என்பது அஞ்சுதல். அதாவது, சிவபெருமான் ஒருவனே தனிமுதற் பொருள் என் அறிந்து, அவனிடத்தில் அன்பு இல்லாதவரைக் காணும்போது, அவர்களது தொடர்பு உலக வாதனையைப் பயக்குமோ என அஞ்சுதல். திருவாசகத்தில் கூறப்பட்ட மற்ற 34 பதிகங்களிலும் (515 பாடல்கள்) கூறப்படாத சில கருத்துகள் 35-ஆவது பதிகமான அச்சப்பத்தில் கூறப்பட்டுள்ளன. இவ்வச்ச ப்பத்துக்கு ஆனந்தம் உறுதல், அதாவது, நேயத்தில் ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்திமை என்பது பழைய குறிப்பு. இறைவன் ஒருவனே அறியத்தக்கவன், காணத்தக்கவன் என்ற உறுதியை விளக்குவதால் இப் பத்து ஆனந்தமுறுதல் ஆயிற்று என்பர். மூவர் முதலிகள் தேவாரம்் முழுவதிலும் யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் கண்டு அஞ்சி

எல்லோரும் ருத்ராட்சம் அணியலாம்

ருத்ராட்சம் தோன்றிய விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஒரு ருத்ராட்சமாவது எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சுத்தபத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே... குளித்தவர்கள்தான் சோப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா.. ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து, நோயில் இருப்பவனுக்குக் கிடையாது என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக் கொள்வோமா... அதுபோலத்தான் சுத்தபத்தமாக இருப்பவர்கள் ருத்ராட்சம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்சம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே, உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்து கொள்ளுங்கள். இது ஒருபுறமிருந்தாலும், எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்சம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். அப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாமா... ஆமாம். ருத்ராட்சத்தை யார் வ

அனுபவம் பலவிதம்

Image
உன்னைத் தேடி உன் வீட்டுக்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம் என்று கூறுகிறது தைத்ரீய உபநிடதம். --------- விட்டுவிடப் போகுது உயிர் விட்டஉடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேர மும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம். -பட்டினத்தார் ------- என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க உன்னை உணராமல் உடல் இழந்தேன் பூரணமே... என்னதான் பெற்றாலும் எப்பொருள் பெற்றாலும் உன்னை அடையாதார் உய்வரோ பூரணமே... -பட்டினத்தார் ---------- இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் எஙகோவே! -துன்றுலே வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம். -வள்ளலார் --------- கோபத்தில் ஒருவனை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால், எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்தக் கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும். -சுவாமி விவேகானந்தர் --------

புதைபொருளாகும் பொருளாதாரம்

இடைமருதூர் கி.மஞ்சுளா உள்ளதைச் சொல்கிறேன்....நல்லதைச் சொல்கிறேன்... பொருளாதாரம் என்பது பொருளைச் சார்ந்ததா அல்லது மக்களைச் சார்ந்ததா அல்லது சமுதாயத்தைச் சார்ந்ததா...படித்தவர்களுக்கு மட்டுமா அல்லது பாமர்ர்களுக்குமா.... பொருலாதாரம் என்பது வெற்றுப் பேச்சா அல்லு வாழ்க்கை நடைமுறைக்கு சாத்தியமா... இத்தகைய கேள்விகள் பாமரர்கள்கூட இன்றைய நாள்களில் கேட்டகத் தொடங்கிவிட்டார்கள். பொருளாதாரம் எந்ற சொல்லின் மூலம், கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதன் பொருள் வீட்டின் நிர்வாகம். உள்ளதைக் கொண்டு தேவைகளை முடியும் மட்டும் நிறைவுசெய்து கொள்வது. பொருளாதாரம் சமூகவியலைச் சார்ந்தது. அது பொருள், சேவையின் உற்பத்தி, பங்கீடு, நுகர்வுகளைப் பற்றிய கல்வி. இக்கல்வியைப் பற்றிப் படித்தால் மட்டும் போதுமா... வாழ்க்கைக்குப் பயன்படவேண்டாமா... அதுதானே கல்வியின் பயன்! ஆடம்ஸ்மித் என்பவர், பொருளாதாரம் என்பது மனித வாழ்வையும் அவர் பொருள் தேவைகளையும் பற்றி அறிவது என்கிறார். இதில் ஒரு பகுதி பொருலாதார வளம் என்றால், மற்ற முக்கியமான பகுதி மனித வளம் என்கிறார் ஆல்பிரட் மார்ஷல். பொருளாதாரம் மக்களைச் சார்ந்தது. அவர்களின் தேவைகளைப் பூர

மூன்றாவது...தாருங்கள்

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர், நாவண்மை உடையவர், அருங்குணம் கொண்டவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். ஒரு முறை நண்பர் ஆறுமுகம் என்பவர் தம்முடைய குடும்பத் தொடர்பாகக் கும்பகோணத்தில் ஒருவருக்கு பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தார். அதில் சாட்சி கையெழுத்திட வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரத் தெரு என்பது. அதை நூற்றுக்காரத் தெரு என்றும் அழைப்பர். இந்த இண்டில் எதைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மகாவித்துவான், இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு என்று போட்டுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் உள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல். (வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு) இரவில் சுண்ணாம்பை அவசியம் ஏற்பட்டாலொழிய இரவல் வாங்கக்கூடாது என்று கூறுவது முன்னோர் வாக்கு. அவ்வாறு வாங்கினால் மூன்றாவது தாருங்கள் என்று கூற வேண்டும் என்பார்கள். இது இன்றைக்கும் வழக்கில் உள்ளது. அதைத்தான் மகாவித்துவான் நகைச்சுவை உணர்வுடன் கூறியிருக்கிறார்.

தியாகமே துறவின் அஸ்திவாரம்

சுவாமி விவேகானந்தர் துறவு பூணக் காரணமாக இருந்த அவர் அன்னை மிகப்பெரிய ஞான அறிவுப் பேரொளி. புலிக்குப் பிறந்தது பின் எப்படி இருக்கும்.... சுவாமி விவேகானந்தர் நரேந்திரனாக இருந்தபோது துறவறம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், தமது தாயாரின் அனுமதி வேண்டும் என்று காத்திருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாயாரிடம் தமது துறவு விருப்பத்தைத் தெரிவிப்பார். ஒருமுறை அவ்வாறு துறவுக்கு அனுமதி கேட்டபோது, சமையலறைக்குப் போய் அங்கிருந்து கத்தியை எடுத்து வா என்றார் அன்னை. விவேகானந்தர் கத்தியைக் கொண்டு வந்து கொடுத்ததும், கொஞ்சநாள் போகட்டும், பிறகு நீ சன்னியாசி ஆகலாம் என்று கூறிவிட்டார். ஒருமுறை கத்தியைக் கொண்டு வந்து விவேகானந்தர் கொடுத்ததும், இனி துறவுக்குப் போகலாம் தடையில்லை என்றார். துறவுக்கு அனுமதி கோரும் பொழுதெல்லாம் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன காரணம் என்ன என்று அன்னையைக் கேட்டார் விவேகானந்தர். அன்னை சிரித்துக்கொண்டே, முன்பு ஒவ்வொரு முறை நான் கத்தியைக் கொண்டுவரச் சொன்ன போதும், பாதுகாப்பான கைப்படியை நீ வைத்துக்கொண்டு ஆபத்தான கூர்மைப் பகுதியை என் பக்கம் நீட்டுவாய். ஆபத்து பிறருக்கு, பாதுகாப்பு உன

வார்த்தை இன்றிப் போகும்போது....

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள் வாய்மைவைத்த சீர்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே...                                                                                                                                                                                                          -சைவ எல்லப்ப நாவலர் என் அன்பான நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், வாசகர்களுக்கும்... மற்றும்...என்னுடைய படைப்புகளோடு சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள் கொண்டு   அதைப்பற்றி (திட்டிப்)  பதிவு  செய்ய இருக்கும் பண்பாளர்களுக்கும் அடியேனின் அன்பான பணிவான வணக்கம்.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை அறிந்தே என் பணியைத் தொடங்குகிறேன். நல்ல செய்திகளை நான்கு பேர் அறிய வேண்டும் என்பார்கள். அதன்படி, இன்றைய தொழில்நுட்பத்தின் (பிரமிக்க வைக்கிறது)  மூலம் நல்ல செய்திகளை (மட்டுமே)ப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.  இந்த பிளாகை உருவாக்கியதற்குப் பல காரணங்கள் சொ

புத்தரின் தியானம் என்னும் மந்திரம்

Image
இன்று ஆகஸ்டு 17. என் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஆம், தியானம் என்றால் என்ன என்பதை மிகவும் எளிமையாகப் பிரிய வைத்த அந்த நூலுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஒரு காட்டு வழியே பயணித்த முனிவர் நீண்ட பயணத்தாலும் பசியாலும் களைப்படைந்தார். உண்பதற்கு காய்கறிகள் கிடைக்குமா என சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு, மந்தையை கவனித்துக் கொண்டிருந்த ஒரு மாடு மேய்ப்பவரன் கண்ணில் பட்டான். அவனை அணுகி, உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா எனக் கேட்டார். உடனே முனிவருக்காக பால் சகறந்து அருந்தக் கொடுத்தான் மாடு மேய்ப்பவன். பசி தீர்ந்த அவர், தாம் ஒரு வல்லமை பெற்ற முனிவர் என்பதையும், இறைவனியமிருந்து அவனுக்காக எதையும் பெற்றுத்தர முடியும் என்பதையும் சொன்னார். ஆனால், அவனோ ஓர் அலட்சிய சிரிப்புடன் எனக்குத் தேவையான எல்லாம் இந்த மாடுகள் மூலம் கிடைக்கின்றன. வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. தேவை என்று எதுவும் இல்லை என்றான். ஏதோ ஒருவிதத்தில் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என யோசித்த முனிவர், சரி.... உனக்கு உலகிலேயே பிடித்தது எது என்றார். அப்போதும் மந்தையில் இருந்த ஒரு மாட்டை சுட்டிக் காட்டினான். உடனே முனிவர், உன்னிடம் ம

அகப்பகை காக்க காக்க...

Image
சிவாய நம திருச்சிற்றம்பலம் வீரத்தாலும் ஆண்மையாலும் புறத்தே எதிர்த்து நிற்கும் பகைவரை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் உட்பகையாகிய காமத்தை வெல்வது அரிதினும் அரிதுதாம். அதனால் ஒருவன் அல்லது ஒருத்தி அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். உலகம் அனைத்தையும் தம் சொல் ஒன்றினால் கட்டுப்படுத்தும் சான்றோர், பல வகையிலும் தீமை செய்யும் காமமாகிய உட்பகை தம்மை நெருங்காதபடி வருந்திக் காத்து நிற்பர். வெளிப்பகைவர் மிகப்பலராக இருப்பினும் அறிவுடை மக்கள் அஞ்சமாட்டார். ஆனால், உட்பகை ஒந்றே ஆயினும் மிகவும் அஞ்சி, தமக்குத் தீங்கு நேராதபடித் தம்மைப் பாதுகாத்துக் கொள்வர். புறப்பகை எதிர்த்து நின்று வெல்லக்கூடியது, அகப்பகை அஞ்சிக் காக்கத்தக்கது. புறப்பகை - வெளிப்படையாக எதிர்க்கும் பகை. அகப்பகை - உறவுபோல நின்று எதிராகச் செயல்படும் அகத்தே உள்ள பகை. அதைத்தான் ஞானாசிரியர் குமரகுருபர சுவாமிகள், புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்ப் அனைத்துலகும் சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலும் காமப் பகை. (நீதிநெறி விளக்கம், பா.54) இதேபோல,   ""வா
மனதில் உறுதி வேண்டும்.  வாக்கினிலே இனிமை  வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் -பாரதியார் அன்றாடம் நாம் வேண்டுவது  இதுவாகவே இருக்கட்டுமே......  
சிவாயநம  என்று சிந்தித்திருப்போருக்கு   அபாயம்  ஒரு நாளும்  இல்லை -^ஒளவையார் 
சிவாயநம திருசிற்றமபலம்