Posts

Showing posts from August 7, 2016

எட்டும் இரண்டும்

Image
 எட்டும் இரண்டும் by -இடைமருதூர் கி.மஞ்சுளா   (7.8.2016 - தினமணி- தமிழ்மணி) ÷மணிவாசகரின் ஒவ்வொரு சொல்லும், சொற்றொடரும் பல மெய்யியல் கருத்துகளை மிக நுட்பமாக (சூட்சுமமாக) விளக்குபவை. அத்தகைய சொற்றொடர்களுள் ஒன்றுதான் "எட்டும் இரண்டும்'! அதற்கான விளக்கத்தைக் காண்போம். ÷"எட்டும் இரண்டும் அறியாதவனாக இருந்த என்னை ஆன்றோர் ஆய்வு செய்யும் சயமவாத சபையில் - பட்டிமண்டபத்தில் ஏற்றினை ஏற்றினை என இறைவனின் திருவருளை மணிவாசகப் பெருமான் இரண்டு முறை வியந்துகூறி, தன்னால் அவனுக்குக் கைம்மாறு செய்யமுடியாததற்காக வருந்துகிறார். ""எட்டும் இரண்டும் அறியாதவன்' என்ற பழமொழி, மணிவாசகரின் சொற்றொடரைக் கொண்டே எழுந்ததாகும். அப்பாடல் வருமாறு:   ""கட்ட றுத்தெனை ஆண்டு கண்ணார நீறு இட்ட அன்பரொடு யாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே'' (திரு.திருச்சதகம்-5; கைம்மாறு கொடுத்தல், பா.49) ÷இப்பாடலில் அவர் குறிப்பிடும் அந்த எட்டும் இரண்டும் எவை என்பதற்கான சுவாமி சித்பவானந்தர் தரும் விளக்கம் வருமாறு: ""அஷ்டமூர்த்தி தத்துவத்தையும் அ