Posts

Showing posts from October 18, 2020

சரஸ்வதி பூஜை - சிறப்புக் கட்டுரை 25.10.2020 "அவனருளால் அவன் தாள் வணங்கி' இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
    சரஸ்வதி பூஜை -   சிறப்புக் கட்டுரை 25.10.2020   " அவனருளால் அவன் தாள் வணங்கி '   - இடைமருதூர் கி . மஞ்சுளா- ஸ்ரீஆதிசங்கரர் வடமொழியில் இயற்றிய , அம்பிகையின் அழகையும் மாண்பையும் வர்ணித்து எடுத்துரைக்கும் " சௌந்தர்யலஹரி ' யின் முதல் பாடலான " சிவசக்தியா யுக்தோ யதிபவதி சக்தப் பிரபவிதும் ' என்ற சுலோகத்தைக் கவிஞர் கண்ணதாசன் கீழ்க்காணுமாறு தமிழாக்கம் செய்திருப்பார் . " சக்தி யுடன் சிவன் சேர்ந்து லகீன்றனன் சக்தி யின்றிச் சிவன் சற்றும் அசைவனோ ? அத்தன் அரிஅயன் போற்றும் என்தாயுன்னைப் பக்தி கொண்டேத்த முற்புண்ணியம் வேண்டுமே !'   " மங்கள சொரூபனான சிவன் எனும் மகாதேவனும் ஆற்றல் மயமான ( பரா ) சக்தியுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆளுவதற்கு ( தோற்றுவிப்பதற்கு ) சக்தி உடையவராகிறார் . அவ்வாறு உன்னோடு கூடியிருக்காவிட்டால் ,   அசையக்கூடத் திறனுள்ளவராக அவர் இருப்பதில்லையன்றோ ? ஆகையால் , அரி , அரன் , பிரமன் ஆகிய மும்மூர்த்திகள் முதலானோராலும் வழிபடப்பெறும் உன்னைப் பூர்