Posts

Showing posts from May 24, 2020

தினமணி - சிறுவர் மணி பிஞ்சுக் கை ஓவியத்துக்கான கதை... அச்சம் தவிர்

Image
அச்சம் தவிர் (சிறுகதை) (30.5.2020) -மணிவாசகப்பிரியா (இடைமருதூர் கி.மஞ்சுளா) இக்கதைக்கான வழக்குரைஞர் கோ.மன்றவாணன் அவர்களின் திறனாய்வுக் கடிதத்தைப் பாருங்கள். அற்புதமாகத் திறனாய்ந்திருக்கிறார். ----------- பெறுநர் : தமிழ்மிகு இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள் (மணிவாசகப்பிரியா)   மேன்மைமிகு அம்மா, வணக்கம். இன்றைய சிறுவர் மணியில் தாங்கள் எழுதிய அச்சம் தவிர் என்ற கதையைப் படித்தேன். கரோனா என்னும் அச்சம் சூழ்ந்த காலத்தில் வாழ்கிறோம்.  இக்காலத்தில் அச்சம் தவிர்க்கும் எண்ணத்தை வளர்க்கும் தங்கள் கதை தேவையான ஒன்று. குழந்தை வரைந்த படத்துக்குப் பொருத்தமாகக் கதை சொல்லி உள்ளீர்கள். ஒரு நிகழ்வில் இருந்து கதையைக் கண்டறிவது எளிது. ஒரு படத்தில் இருந்து கதையை உருவாக்குவது எளிது இல்லை. ஆனால் உங்களுக்கு எளிதாக உள்ளது. தங்கள் கதை சொல்லும் பாடங்கள் : 1. அச்சம் தவிர்த்தல் 2. இடர்மிகுந்த நேரத்தில் எதிர்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்தல் 3. உயிர்களிடத்தில் அன்பு வைத்தல் (பாம்பு ஆனாலும் அதைக் கொல்லாது இருத்தல்) கதையின் இறுதி வரி என்னைக் கவர்ந்தது. வேலுவும் பாலுவும் ஓடிப்போய் அம்மாவை இறுகக் கட்டிக

சிறுவர்மணியில் வெளியான “பொய்சொல்லக் கூடாது” சிறுகதை

Image
    “ பொய்சொல்லக்   கூடாது ” தினமணி - சிறுவர்மணி (23.5.2020) இடைமருதூர் கி.மஞ்சுளா சிறுவர்மணியில் வெளியான  “ பொய்சொல்லக் கூடாது ” சிறுகதையைப் படித்துவிட்டு, சிலாகித்து, பாராட்டி கடிதம் எழுதி அனுப்பிய பெருந்தகை கடலூர் வழக்குரைஞர் கோ.மன்றவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி…     அவர் குறிப்பிடுவதுபோல நானும் வாண்டு மாமாவின் கதைகளைப் படித்து வளர்ந்தவள்தான். 60-70 களில் பிறந்தவர்களால் எப்படி வாண்டு மாமாவை மறக்க முடியும்…. நானும் வாண்டு மாமாவின் பரம ரசிகைதான்….வாண்டு மாமாவின் அருகில் என்னைக் கொண்டுசென்ற அவருக்கு என் நன்றி பல….   வழக்குரைஞர் கோ.மன்றவாணன் எழுதிய கடிதத்தைப் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்…. ------   மேன்மைமிகு   தமிழம்மை அவர்களுக்கு வணக்கம் .   “ பொய்சொல்லக் கூடாது ” என்ற சிறுவர்களுக்கான சிறுகதையை இன்று சிறுவர் மணியில் படித்தேன் .  சிறப்பாகவும் கருத்தாகவும் இருந்தது . விறுவிறுப்பாகக் கதை   சொல்கிறீர்கள் .   உங்கள் கதையைப் படித்த   போது , நானும் சிறுவனாகவே மாறிப் போனேன் . என் சிறு பருவத்தில் வாண்டுமாமாவின் ரசிகன் நான் .  அந்த வாண்டு மாமாவின்   கதை