இடைமருதூர் கி.மஞ்சுளா பற்றி.....



இடைமருதூர் கி.மஞ்சுளாவைப் பற்றிய சிறு குறிப்பு.......

வேதாரண்யம் அருகில் உள்ள கரும்பம்பலம் என்ற சிற்றூரில் 1969-ஆம் ஆண்டு பிறந்தவர். தாய்-எஸ்.கல்யாணி (அரசுப் பள்ளி நூலகர், இந்தி பண்டிதர்-ஓய்வு),
தந்தை-கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்).  ஆரம்பக் கல்வியை சுவாமிமலை மூலப்பள்ளி என்னும் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக்
கல்வியை (9,10-ஆம் வகுப்பு) சுவாமிமலை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 11, மற்றும் 12-ஆம் வகுப்பை திருவிடைமருதூர் (இடைமருதூர்), திருவாவடுதுறை
ஆதீன உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் (தமிழ் இலக்கியம்), எம்.ஏ.,(தமிழ் இலக்கியம்), அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் பயின்றவர்.

இளம் முனைவர் (எம்ஃபில்)பட்டத்திற்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு திருவாசகத்தில் மகளிர் ஆடல். முதல் இடத்தில் தேர்வு பெற்ற இந்த ஆய்வேடு,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவியோடு 2005-ஆம் ஆண்டு நூலாக வெளிவந்ததுள்ளது. தற்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்ட(திருவாசகம் தொடர்பாக)  ஆய்வு செய்து வருகிறார்.
 
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகள் அறிந்தவர். இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சிறுகதைகள் ஆத்ம தாகம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தி சிறுகதைத் தொகுதி ஒன்று சிங்கம் கூறிய செய்தி என்ற பெயரில் கவிதா பப்ளிகேஷன் வெளியீடாக வந்துள்ளது. தினமணி சிறுவர் மணியிலும்
பல மொழிபெயர்ப்பு கதைகள் வெளிவந்துள்ளன. தினமணி தமிழ்மணியில் வெளியான இலக்கியக் கட்டுரைகள் "இலக்கியச் சொற்கோயில்" என்ற தலைப்பில்
கவிதா வெளியீடாகவும், தினமணி வெள்ளிமணியில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகள், "உடனாய் நிற்கின்றான்" என்ற பெயரில் ஆனந்த நிலையம் வெளீயீடாகவும்,
"அறம் வளர்த்த நாயகி" என்ற நூல் சங்கர் பதிப்பகம் வெளியீடாகவும் இப்படி 20க்கும் மேற்பட்ட நூல் வெளிவந்துள்ளன.

ஆன்மிகக் களஞ்சியம் என்ற மாத இதழிழ் பொறுப்பாசிரியராகவும் (8 ஆண்டுகள்), தினமலர் நாளிதழில், பிழைதிருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும்
இருந்தாவர். தற்போது, 2008-ஆம் ஆண்டிலிருந்து தினமணி நாளிதழில், உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று, தற்போது முதுநிலை உதவி ஆசிரியராக நிருபராகப்
பணியாற்றி வருகிறார்.

விருது, சமயக் கல்வி
1. திருவாவடுதுறை ஆதீனம் 23-ஆவது குருமகாசந்நிதானம் அவர்களால் "சைவத்தமிழ் சிந்தையர்" என்ற விருதைப் பெற்றவர்.
2. திருவாவடுதுறை ஆதீனத்தால் நடத்தப்பட்ட சைவசித்தாந்த பயிற்றி மையத்தில் பயின்று, நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று "சித்தாந்த இரத்தினம்" என்ற
பட்டம் பெற்றவர்.

பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு கட்டுரை வழங்கியும் வாசித்தும் உள்ளார். காவேரிப்பாக்கத்தில் உள்ள மாணிக்கவாசகர் மன்றத்தோடு நெருங்கிய தொடர்பு
உள்ளவர். அங்கு நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் திருவாசகம் தொடர்பாகப் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றியுள்ளார்.
நூல்கள்
20 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
7 க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
80க்கும் மேற்பட்ட இலக்கிய, ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவருடைய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பல மாத, நாளிதழ்களில் பிரசுரமாகியுள்ளன.
இவருடைய வழிபடு நூல் திருவாசகம். இவருடைய மானசீக ஞானாசிரியர் மாணிக்கக் கூத்தனின் அன்பன் இன்ப மாணிக்கவாசக சுவாமிகள்.






Comments

  1. I am immensely pleased to read the profile of Idaimarudur Smt. K. Manjula. I am M.Subramanian from Tiruvidaimarudur, Founder President of Thiruvidaimarudur Old Students" Association (TOSA), a 9 year old organisation. At present, I am placed at Thiruvidaimarudur. After retirement, I have chosen to settle in TDR my native place. My e mail id is tdr.msubramanian@gmail.com. Request Smt. Manjula to contact me through mail so that I can send a brief write-up on TOSA. I wish, Madam should address our Students by way of a motivation talk.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!