விவசாயிக்கு ஏற்பட்ட சிக்கல்



சிக்கலும் தீர்வும்
இந்தி மொழிபெயர்ப்பு: இடைமருதூர் கி.மஞ்சுளா

÷ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் மூத்த மகளை ஒரு குயவனுக்கும், இளைய மகளை ஒரு விவசாயிக்கும் திருமணம் செய்து வைத்தான்.
÷ஒரு நாள் தம் இரண்டு பெண்களையும் பார்த்து விட்டு, அவர்கள் தொழில் எப்படி நடக்கின்றது என்று விசாரித்து வரலாம் என்று நினைத்த தந்தை, முதலில் மூத்த மகளின் வீட்டுக்குச் சென்றான். மகளைப் பார்த்து, ""மகிழ்ச்சியாக இருக்கிறாயா? உங்கள்  தொழிலெல்லாம் எப்படி நடக்கிறது?'' என்று விசாரித்தார்.
÷அதற்கு அவள், ""இந்த முறை நிறைய உழைத்து நிறைய மண்பாண்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்த ஆண்டு ஒருவேலை மழை பொழியவில்லை என்றால், எங்கள் வியாபாரம் இன்னும் நன்றாக நடக்கும். அதனால், இந்த ஆண்டு மழை பொழியக் கூடாது என்று எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே'' என்றாள். அவரும் ""சரி மகளே, இந்த முறை மழை பொழியக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து இளைய மகள் வீட்டுக்கு வந்து, அவளிடம் நலம் விசாரித்தார்.
÷இளைய மகள், ""தந்தையே! இந்த முறை நிறைய உழைப்பைக் கொடுத்து வயலில் நிறைய விதைத்துள்ளோம். நன்கு வளர்ந்து வருகிறது. ஆனால் மழைதான் இல்லை. இந்த வருடம் மழை மட்டும் நிறையப் பொழிந்தால் எங்கள் விளைச்சல் பன்மடங்காகும். நிறைய லாபமும் கிடைக்கும். அதனால், இந்த ஆண்டு நிறைய மழை பொழிய வேண்டும் என்று எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்'' என்றாள்.
÷""அப்படியே வேண்டிக் கொள்கிறேன் மகளே‘' என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார். மூத்த மகளுக்காக மழை பொழியக்கூடாது என்று வேண்டிக்கொண்டால், இளைய மகளின்  தொழில் பாதிக்கப்படும். அப்படியே இளைய மகளுக்காக மழை பொழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டால், மூத்த மகளின் தொழில் பாதிக்கப்படும். என்ன செய்வது? இதற்கு என்னதான் முடிவு? இந்தச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் விவசாயி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
÷உடனே மூத்த மகளின் வீட்டுக்குச் சென்று, அவளிடம், ""இந்த ஆண்டு மழை இல்லாமல் இருந்தால் உனக்கு வரும் லாபத்தில் பாதியை உன் இளைய சகோதரிக்குக் கொடுத்துவிடு'' என்றும், இளைய மகள் வீட்டுக்குச் சென்று, ""இந்த முறை நிறைய மழை பொழிந்தால் உன் தொழிலில் வரும் லாபத்தில் பாதியை, உன் மூத்த சகோதரிக்குக் கொடுத்துவிடு'' என்றும் கூறினார். அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டனர்.
 சிக்கலுக்கும் தீர்ந்தது சிக்கலுக்குத் தீர்வும் கிடைத்தது.


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!