சிறுவர் சிறுகதை - தினமணி சிறுவர்மணி



சில மாதங்களாக செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அனைவரும் எப்படி அவதிப்பட்டோம். அதை மறக்க முடியுமா? ஆனால், செல்லாத காசை (தாய்-தந்தை தந்தது) சேர்த்து வைத்திருந்த நான், அதைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு செல்லும் காசாக மாற்றிய அற்புதம் தினமணி-சிறுவர்மணியில் எழுதிய “செல்லாக்காசு” எனும் சிறுவர் சிறுகதையால் நிகழ்ந்தது.




ஆம்… அந்தச் செல்லாக்காசு சிறுகதை சாகித்ய அகாதெமியினரால் தேர்வு செய்யப்பட்டு,  செல்லும் காசாகி, இன்று எனக்கு அக்கதைக்கான தொகை காசோலையாக வந்துள்ளதை நினைத்து, சிறுவர் இலக்கியத்திற்காக நான் வாங்கிய சாகித்ய அகாதெமி விருது என்றே அகமகிழ்கிறேன். சாகித்ய அகாதெமிக்கு என் மனமார்ந்த நன்றி…நன்றி…நன்றி… கூடவே முனைவர் சொ. சேதுபதி அவர்களுக்கு, முனைவர் இரா.காமராசு அவர்களுக்கும்…

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!