அனுபவம் பலவிதம்

உன்னைத் தேடி உன் வீட்டுக்கு எவர் வந்தாலும் அவரைப் போகச் சொல்லாதே. இது விரதம் என்று கூறுகிறது தைத்ரீய உபநிடதம்.
---------


விட்டுவிடப் போகுது உயிர் விட்டஉடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு
எந்நேர மும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.

-பட்டினத்தார்
-------


என்னை அறியாமல் எனக்குள்ளே நீ இருக்க
உன்னை உணராமல் உடல் இழந்தேன் பூரணமே...
என்னதான் பெற்றாலும் எப்பொருள் பெற்றாலும்
உன்னை அடையாதார் உய்வரோ பூரணமே...

-பட்டினத்தார்
----------

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் எஙகோவே! -துன்றுலே
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

-வள்ளலார்
---------

கோபத்தில் ஒருவனை ஒரு அடி அடித்து விடுவது எளிது. ஆனால், எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்தக் கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்
--------

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!