நாம் அன்றாடம் பேசுவது தமிழா - 2

தினமணி - தமிழ்மணி - 27.3.2016

(தமிழ் மொழியோடு கலந்து தமிழ் போலவே வழங்கிவரும் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.)

சம்ஸ்கிருதம் - தமிழ்

அகங்காரம் - செருக்கு
அதிர்ஷ்டம் - நற்பேறு
அக்கிரமம் - முறைகேடு
அத்தியாவசியம் - இன்றியமையாதது
அநேகம் - பல
அந்தரங்கம் - மறைவு
அபிப்ராயம் - கருத்து
அபூர்வம், அற்புதம் - புதுமை
அர்த்தம் - பொருள்
ஆட்சேபனை - தடை, மறுப்பு
ஆரம்பம் - தொடக்கம்
ஆராதனை - வழிபாடு
ஆனந்தம் - மகிழ்ச்சி
உற்சாகம் - ஊக்கம்
உபயோகம் - பயன்
கலாசாரம் - பண்பாடு
கஷ்டம் - தொல்லை
சங்கதி - செய்தி
சதா - எப்போதும்
சப்தம் - ஓசை
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சபதம் - சூளுரை
சகஜம் - வழக்கம்
சம்பந்தம் - தொடர்பு
சம்மதி - ஒப்புக்கொள்
சிகரம் - முகடு, மலையுச்சி, கொடுமுடி
சிகிச்சை - மருத்துவம், பண்டுவம்
சிகை - தலைமுடி, குடுமி, முடி
சிங்கம் - அரிமா, மடங்கல்
சிங்காரம் - ஒப்பனை
சிசு - குழந்தை
சித்தாந்தம் - கொண்முடிவு
சித்தி - கைகூடுதல்
சித்திரை - மேஷம்
சிம்மாசனம் - அரியணை
சிரஞ்சீவி - நீடுவாழ்வோன்
சிரத்தை - அன்பு, அக்கறை, முயற்சி,
சிலாகித்தல் - புகழ்தல்
சிலேடை - இரட்டுர மொழிதல்
சிநேகம் - நட்பு
சீக்கிரம் - விரைவு
சீடன் - மாணாக்கன்
சீதளம் - குளுமை
சீமந்தம் - வளைகாப்பு
சீலம் - ஒழுக்கம்
சுக்கிரன் - வெள்ளி
சுக-துக்கம் - இன்ப-துன்பம்
சுகாதாரம் - நலவாழ்வு, துப்புரவு
சுகம் - இன்பம், நலம்
சுத்தம் - தூய்மை, துப்புரவு
சுத்திகரிப்பு - தூய்மையாக்கம், துப்புரவாக்கம்
சுதந்திரம் - விடுதலை, தன்னுரிமை
சுபாவம் - இயல்பு
சுலபம் - எளிது
சுப்ரதீபம் - பேரொளி
சுபதினம் - நன்னாள்
சுயம்பு - தான்தோன்றி
சுயமரியாதை - தன்மதிப்பு
சுயாட்சி - தன்னாட்சி
சுயேட்சை - தன்விருப்பு




தொகுப்பு – சிவமானசா (புனைபெயர்)
 (இடைமருதூர் கி.மஞ்சுளா)

சொற்கள் வளரும்...

இப்பகுதிக்கு நல்ல வரவேற்று நிறைவே  இருக்கிறது.  எந்த மொழி என்று அறியாமலேயே நம்மொழியோடு கலந்த பலமொழிச் சொற்களையும் நாம் அன்றாடம் தமிழ் எனக் கருதிப் பயன்படுத்தி வருகிறோமே..... இதுதான் இப்பகுதியைப் படிக்கும் பலருடைய ஆதங்கம். இதைத் தெரியப்படுத்தியமைக்காக சிவமானசாவுக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.

தினமணி தமிழ்மணியின் மூலம்,  இலக்கியப் பொன்மொழிகள்,  வேருக்கு நீர் வார்த்தவர்கள்,  முத்திரைப் பதிவுகள்,  கவிராயர்கள், நூல் அகராதி அறிவோம், நூல் வகைகள், மயங்கொலிச் சொற்கள், முதுமொழிக் காஞ்சி (பத்து பத்து) நாம் அன்றாடம் பேசுவது தமிழா முதலிய தொகுப்புகளை (சிலவற்றில் பெயர் வெளிவந்திருக்காது)  தினமணி வாசகர்களிடம் கொண்டு சேர்த்த  மனநிறைவு இப்போது கிடைத்துவிட்டது. சிவமானசாவைப்  பாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி

-இன்ப அன்புடன்
இடைமருதூர் கி.மஞ்சுளா

(சிவமானசா)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!