மண்ணடி மல்லிகேசுவரர் திருக்கோயில் தல வரலாறு



தைப்பூசத்தன்று மண்ணடி ஸ்ரீமல்லிகேசுவரர் கோயில் குடமுழுக்கு விழா. காணக் கொடுத்து வைக்கவில்லை. என்னைக் கவர்ந்த சிவமூர்த்தங்களுள் ஸ்ரீமரகதாம்பாள் உடனுறை மல்லிகேசுவரர் மூர்த்தமும் ஒன்று. ஆம்… அவர் நிகழ்த்தும் அற்புதங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அதனால் அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அதற்கு நேரமும் வந்தது. அக்கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் ஒருவர் இந்தப் பிரசித்தி பெற்ற கோயிலுக்கு சரியான தல வரலாறு கிடையாது. அதை நீங்கள்தான் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தி தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை, மல்லிகேசுவரரே கூறுவது போல சிரமேற்கொண்டு எழுத முயற்சி  செய்தேன். அதைத் திருவருள் முடித்துக் கொடுத்தது. 







அதே கோயிலில் நூல் வெளியீடு, திரு வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட, திருவாளர் திருப்பூர் கிருஷ்ணன் ஐயா அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு அக்கோயிலிலேயே அமர்ந்து சிறப்புரை ஆற்றினார். அவரின் எளிவந்த தன்மை..... சிவபெருமானின் எளிவந்த தன்மையை விஞ்சியது. (பெரிய பெரிய அரங்கில் பேசிக்கூடியவர் அவர்)  அடியேனுக்காக வந்தது (நேரம் ஒதுக்கியது) நான் செய்த பாக்கியம்.
 இக்கோயிலுக்குப் பல சிறப்புகள் உள்ளன. அதில் ஒன்று இக்கோயில் மரண பயம் போக்கும் வகையில் தெற்கு நோக்கி நுழைவாயில் அமைந்துள்ளதுதான். கூடவே நம்மை இங்கு நடராசப் பெருமானே சிவகாமி அம்மையுடனும், மாணிக்கவாசகருடன் அன்போடு வரவேற்பார். இப்பதிவை அன்றே பதிவு செய்திருக்க வேண்டும்….நேரமின்மை மட்டுமல்ல இணையதள சேவையும் சரிவர இயங்காததால் பதிவு செய்ய முடியவில்லை. மேலும், திருக்குடமுழுக்கு நடந்து 48 நாள்களுக்குள் சென்று தரிசிப்பது சிறந்தது என்று கூறக் கேட்டிருக்கிறேன். 






ஆனால், மல்லிகேசுவரரோ... நான்கே நாள்களில் என்னை அழைத்துவிட்டார். நேற்று (ஞாயிறு-12.2.17) சென்று தரிசித்துவிட்டு வந்தது மனநிறைவைத் தந்தது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் மல்லிகேசுவரரைத் தரிசியுங்கள்…. எமபயம் மட்டுமல்ல… எல்லாவித பயங்களும் விலகும். 


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!