கையெழுத்தில் திருவாசகம் - இடைமருதூர் கி.மஞ்சுளா (மணிவாசகப்பிரியா)நூல் (மானசீக) வெளியீடு


8.3.2020 மகத்தான ஒரு நன்னாள்... என் வாழ்வில் ஒரு பொன்னாள்...
மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை, நங்கைநல்லூர் சிவநேயப் பேரவையின் சார்பில் நடந்த மகளிர் விழாவில் சாதனை மகளிருக்கான விருதை வழங்கி கௌரவுக்கும் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பேரவையில் "விருது பெற்ற நானும், திருமதி வான்மதி அவர்களும்) பெரும் பேறு கிடைத்தது.

இந்நிகழ்ச்சில் ஸ்ரீலஸ்ரீ வாதவூரடிகளார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி அற்புதமாக நடைபெற்றது. கூடவே... இந்த ஆண்டில் இறைவன் என் பொருட்டு நிகழ்த்திய ஓர் அற்புதத்தையும் அவர் திருமுன்பாகப் பதிவு செய்ய முடிந்தது என் பாக்கியம்.

கடந்த 2019 டிசம்பரில் பட்டாபிராமில் நடந்த திருவாசக நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரு.அருளரசு அவர்கள் திருவாசத்தைப் பற்றிக் கூறும்போது... இறைவன் எவ்வளவு கஷ்டப்பட்டு அதை எழுதியிருப்பார்.... நாம் தினமும் ஒரு பதிகத்தையாவது பாட வேண்டும்... கைப்பட எழுதிப் பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன் மூலம் திருவருள் அவருள்ளிருந்து எனக்கு எழுதும் ஊக்கத்தை ஏற்படுத்தினார் என்று நினைத்தேன்.

அதன் விளைவாக ஜனவரி 2020 முதல் தேதியிலிருந்து (ஜனவரி 31 நாட்கள்) தொடர்ந்து எந்த முட்டு்ப்பாடும் நிகழா வண்ணம் திருவருள் என்னை பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தினமும் ஒரு பதிகமாக எழுதவைத்தது... அதற்கு "கையெழுத்தில் திருவாசகம்" என்னும் திருப்பெயர் சூட்ட வைத்தது. இதைவிடப் பெரிய அற்புதம் ஒன்றையும் என் பொருட்டு இறைவன் நிகழ்த்தியிருக்கிறார். இது என் குடும்பத்தாருக்கே இதுவரை தெரியாது... இப்போது தெரிந்திருக்கும்....

அது.... இதுதான்

51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தைத் தொடர்ந்து 51 நாட்கள்... எனது 51ஆவது வயதில் எழுதி முடிக்கிறேன். அதுமட்டுமல்ல....
நேற்று நடந்த சிவநேயப் பேரவை நிகழ்வில் மகஸ்ரீ அவர் 49 நூல்களை எழுதியிருப்பதாகவும், நேற்று வெளியிடப்பட்ட ஐயடிகள் காடவர்கோன் எழுதிய "திருத்தல வெண்பா" 50ஆவது நூல் என்றும்... அதே மேடையில் இறைவன் என்னை எழுதவைத்த "கையெழுத்தில் திருவாசகம்" என்ற நூல் 51-ஆவது நூலாக (இறைவன் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்) மேடையில் மானசீகமக வெளியிடப்பட்டது என்பதையும் ஸ்ரீவாதவூரடிகளார் சொன்னபோது.... நெஞ்சம் நெகிழ்ந்தது கண்கள் கலங்கின...

அற்புதம் அத்துடன் நிற்கவில்லை. நேற்று தேதி 8 (திருவாசகம் 8ஆம் திருமுறை) நேற்று மாதம் எட்டு (தட்சிணாமூர்த்திக்கு(குரு) உகந்த எண் 3)
தகுந்த தருணத்தில் இந்த நூலை வெளிப்படுத்திய திருவருள்... அதுதான் திருவருளின்..... பெருங்கருணை.நேற்று மாசி மகம்- நடராஜப் பெருமான் அபிஷேக நன்னாள்...தகுந்த தருணத்தில் இந்த நூல் மூலம் தன்னை வெளிப்படுத்திய திருவருள்.... அதுதான் திருவருள்...

இப்படியொரு நன்னாள் இனி யாருக்கும் வாய்க்காது..

அந்த நூல் கூடிய விரைவில் அன்பர்களின் பார்வைக்கு வரும்... அந்த நாளையும் இறைவன் கூட்டுவிப்பான்...

எல்லாம் அவன்(ர்) செயல்....என்பதே....

இங்கே ஏன் அடைப்புக்குறியில் "ர்" உள்ளதென்றால்... அவன் செயல் என்றால்... சிவன் செயல்...என்றாகும்... அவள் செயல் என்றால் அம்மை பார்வதியின் செயல்... என்றாகும்... ஆனால், அவன் அர்த்தநாரியாக... உமையொருபாகனாக, மாதொருகூரனாக இருப்பதால் "அவர்" செயல்...

 அந்த நூல் கூடிய விரைவில் அன்பர்களின் பார்வைக்கு வரும்... அந்த நாளையும் இறைவன் கூட்டுவிப்பான்...

என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக இந்தக் "கையெழுத்தில் திருவாசகம்" நூல் எழுதியதைத்தான் பெருமையாக... சாதனையாகக் கருதுகிறேன்...


இந்த நிகழ்ச்சியின் படங்களை அற்புதமாக தனது புதுக் கேமராவில் எடுத்து உதவிய சிவனடியார் தில்லை டிராவல்ஸ் (புனித யாத்திரைக்கு வாருங்கள்) நிறுவனர் அவர்களுக்கு என் இன்ப அன்புடன் கூடிய நன்றி ....

உடல் நிலை சரியில்லாதபோதும் வந்து கலந்துகொண்டு விழாவை சிறப்பித்த தோழி பாவையர் மலர் - ஆசிரியர் திருமதி வான்மதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி...
  
சிவநேயப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வந்திருந்த நண்பர்கள் மகளிர் அனைவருக்கும் என் நன்றி

இதனால்தானோ என்னவோ இத்தனை ஆண்டுகள் நான் உயிரோடு இருந்தேன்....போலும்...

 (இடமிருந்து) இடைமருதூர் கி.மஞ்சுளா... பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி உடன் குடந்தை சகோதரி கே.மஞ்சுளா....மற்றும்  மக்கள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்....

என் அருகில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருப்பவர் சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன் அவர்கள்...எனக்காக ஒரு கவிதையும் இவர் எழுதிக் கொண்டுவந்து தந்தார். அந்தக் கவிதை இறுதியில் இடம்பெறுகிறது... படித்து மகிழுங்கள்...
 உடன் நின்றிருப்பவர் (உரத்த சிந்தனை - உறுப்பினர்) திருமதி நா.பிச்சம்மாள் அவர்கள்.



விருது பெற்ற பெண்மணிகள்...


ஸ்ரீலஸ்ரீ வாதவூரடிகளாரின் பொற்கரங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான நினைவுப் பரிசு பெறுகிறேன்...




 ஈசநேசன் மகஸ்ரீ அவர்கள் உரை விளக்கம் எழுதிய ஐயடிகள் காடவர்கோன் எழுதிய திருத்தல வெண்பா நூல் வெளியீடு



 குழந்தைக் கவிஞர் அழவள்ளியப்பா... வின் வாரிசு..  சமீபத்தில் பால சாகித்திய விருது பெற்ற திருமதி தேவி நாச்சியப்பன் அவர்கள்...


இறையருள் தந்த வெகுமதி
-சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்

எல்லோரும் உலகினில் இருக்கின்றார்கள்
எல்லோருமா இவ்வுலகில் வாழ்க்கின்றார்கள்
இருக்கும் வரை பிறர்க்குதவி இன்னசொல் ஈந்து
இருப்போர்கள் நல்லோர்கள் நினைவில் வாழ்வார்

மானுடச் சோலையிலே மனிதப்பூக்கள்
மணம்வீசும் மருந்தாகும் மலராய்மலர்ந்து
பிணிபலவும் தீர்த்துவைக்கும் பிறரை உயர்த்தும்
பிறந்தபயன் நிறைவாக்கிப் புனிதம் சேர்க்கும்

அதுபோன்றே மகஸ்ரீயின் பணிகள் யாவும்
அருட்பணியாய் கலைப்பணியாய் கவிதைப்பணியாய்
களங்காணும் நூற்படைப்பும் மிகுந்து தோன்றும்
கண்ணுதலான் சிவசக்தி, கருணை விளையும்

இன்றுமட்டும் மகளிர்தினம் என்றில்லாமல்
இருக்கின்ற நாட்களெல்லாம் மகளிர்தினமே
மிகைப்படுத்தல் இல்லையிது, ஆய்ந்து நோக்கின்
இல்லறமும் நல்லறமும் இவர்களால் தான்

நன்றாற்றும் பணிகளுக்கு இந்தவிருது
நாளெல்லாம் உழைப்பதற்கு ஊக்கப்பரிசு
மென்காற்றில் விளைசுகமாய் விளங்கும் விருது
மேன்மேலும் உயர்வதற்கு வாழ்த்தும் விருது

வாழ்த்தி விருதளித்து வளர்புகழில் நிலைநிற்கும்
வாதவூரடிகளார் அவர்களை வணங்கி மகிழ்கிறோம்
தினமணி துணையாசிரியர் இடைமருதூர் கே.மஞ்சுளா அவர்களுக்கும்
பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி மணிகண்டன் அவர்களுக்கும்
மன்றம்நிறை நல்லோர் மகிழ்ந்தளிக்கும் வாழ்த்து.

-சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!