(கரோனா) ஆபத்துக்கு உதவும் பயனாடைகள்


ஆபத்துக்கு உதவும் பயனாடைகள்
-இ.கி.ம.

முகக் கவசம் தட்டுப்பாடு… பலரும் கைக்குட்டையைத்தான் கட்டிக் கொண்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறோம்.
சென்ற ஆண்டு ஏதோ ஒரு நிகழ்ச்சியில் யாரோ ஒருசிலர் எனக்குப் போர்த்திய பயனாடைகள்தான் (கதர் துண்டு) (பயன்படாத பொன்னாடை அல்ல) இப்போது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு முகத்தை மறைத்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.




இப்படிப் பயன்படாத விலை அதிகமுள்ள பொன்னாடைகள் பல என் வீட்டு லேஃப்ட்டில் கிடக்கின்றன. ஆனால், குறைந்த விலையில் கிடைக்கும் பயனாடைகள் (வெள்ளை கதர் துண்டுகள்) இப்போது (கரோனா நோய்த் தொற்றுக்கு) ஆபத்துக்கு உதவுகிறது…
நட்பு வட்டங்களே…  தயவு செய்து இனி நிகழ்ச்சிகளில் கௌரவம் கௌரவம் என்று நினைத்து பொன்னாடைப் போத்துவதைத் தவிர்த்து பயனாடை அணிவியுங்கள். அவர்களுக்கு அது உதவும்போது… உங்களை அவர் மனமும் வாயும் வாய்த்தும்.

இ.கி.ம.


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!