இனியாவது விழித்துக் கொள்வோமே…


நட்பு வட்டங்களே… இனியாவது விழித்துக் கொள்வோமே…

இன்ப அன்புடனும் நட்புடனும்…

இடைமருதூர் கி.மஞ்சுளா



எல்லா காலங்களிலும் எல்லா தீமைகளுமே நமக்குப் பலவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன.
குறிப்பாக, கரோனா நோய்த் தொற்று நமக்குப் புகட்டிய பாடங்கள் ஏராளம்… அதைக் கற்றதுடன் நிற்காமல் “நிற்க அதற்குத் தக” என்கிற திருவள்ளுவரின் குறளை (குரலை) செவிமடுத்து நடப்பது மிக மிக அவசியம்.

ஊரடங்கு அடங்கிய பிறகு உலக மக்கள்… குறிப்பாக நம் இந்திய மக்கள் (மட்டுமாவது) கடைப்பிடிக்க வேண்டிய 5 கட்டளைகள் அல்ல இவை. எதிர்காலத்தில் இந்தியா ஆரோக்கியமாகவும் செழுமையாகவும், வல்லரசாகவும் திகழ - இருக்க  வேண்டும் என்றால்… உடன்பிறவா சகோதரியான ஒருத்தி தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்ளும் 5 வேண்டுகோள் இவை.

யாதும் ஊரே… யாவரும் கேளிர்….(கேளீர்-கேளுங்கள்) என்பது உண்மையானால்……

11.   ஊடரங்கு தளர்த்தப்பட்டு,,, எல்லாக் கடைகளும் திறந்தவுடன் உடனே ஜவுளிக்கடைக்கும், நகைக்கடைக்கும், பிற அழகு சாதனப் பொருள்களை வாங்கவும் படையெடுப்பதைத் தவிர்க்கவும். இது முக்கியமாகப் பெண்களுக்குத்தான். ஆண்களின் (கணவரின்) வருமானத்தை நல்ல வழியில் பாதுகாத்து, ஆபத்துக் காலத்துக்கென சேமிக்கப் பழகுங்கள். பிறருக்குக் கொடுக்கவும் பழகுங்கள்.

22.   தேவையில்லாத சமையல் பாத்திரங்களையும், மரச் சாமான்களையும், அலங்காரப் பொருள்களையும், பிறவற்றையும் அடிக்கடி வாங்கி வீட்டில் அடைப்பதைத் தவிருங்கள்.

33. இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும்,   இரு வாரங்களுக்குத் தேவையான காய்கறிகளையும் வாங்கி வைக்கத் தொடங்கினால், அநாவசியமாக அடிக்கடி வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம்.

44. மிக அவசியமாக… தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளிமாநிலங்களுக்கோ, பிற ஊர்களுக்கோ (ரயிலிலோ, பேருந்திலோ) பயணம் மேற்கொள்ளுங்கள். பயணம் என்பதே பயனுள்ளது என்பதைத்தான் குறிக்கும். நமக்குப் பயன்படக்கூடிய பயணமாக அது இருக்க வேண்டும். பயனற்ற…. தேவையற்ற பயணம் உடலுக்கும் உயிருக்கும், சேமிப்புக்கும் கேடு விளைவிக்கும்.

 5. குறிப்பாக ஆண்களுக்கு… இது. பள்ளி, கல்லூரி, வேலைக்குச் சென்று திரும்புவதைத் தவிர பிற நேரங்களில் பிறரோடு சாலைகளிலோ, பெரிய பெரிய மால்களிலோ, தியேட்டர்களிலோ, ரயில், பேருந்து நிலையங்களிலோ சுற்றித் திரிவதை காலத்தின் அருமை கருதி அவசியம் தவிர்க்கவும்.

இந்த 5  வேண்டுகோளையும் வருங்காலத்தில் நாம் (என் நட்பு வட்டமாவது) கடைப்பிடித்து, நம்மிடம் “இருப்பதே போதும்” என்கிற “திருப்தி” வந்துவிட்டால்… நாம்தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்…

இன்ப அன்புடனும் நட்புடனும்…
இடைமருதூர் கி.மஞ்சுளா


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!