சிறுவர்மணியில் வெளியான “பொய்சொல்லக் கூடாது” சிறுகதை

 

 பொய்சொல்லக் கூடாது

தினமணி - சிறுவர்மணி (23.5.2020)

இடைமருதூர் கி.மஞ்சுளா


சிறுவர்மணியில் வெளியான  பொய்சொல்லக் கூடாதுசிறுகதையைப் படித்துவிட்டு, சிலாகித்து, பாராட்டி கடிதம் எழுதி அனுப்பிய பெருந்தகை கடலூர் வழக்குரைஞர் கோ.மன்றவாணன் அவர்களுக்கு மிக்க நன்றி…  

 அவர் குறிப்பிடுவதுபோல நானும் வாண்டு மாமாவின் கதைகளைப் படித்து வளர்ந்தவள்தான். 60-70 களில் பிறந்தவர்களால் எப்படி வாண்டு மாமாவை மறக்க முடியும்…. நானும் வாண்டு மாமாவின் பரம ரசிகைதான்….வாண்டு மாமாவின் அருகில் என்னைக் கொண்டுசென்ற அவருக்கு என் நன்றி பல….

 வழக்குரைஞர் கோ.மன்றவாணன் எழுதிய கடிதத்தைப் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்….

------

 

மேன்மைமிகு தமிழம்மை அவர்களுக்கு வணக்கம்.

 பொய்சொல்லக் கூடாது என்ற சிறுவர்களுக்கான சிறுகதையை இன்று சிறுவர் மணியில் படித்தேன்சிறப்பாகவும் கருத்தாகவும் இருந்தது. விறுவிறுப்பாகக் கதை சொல்கிறீர்கள்.

 உங்கள் கதையைப் படித்த போது, நானும் சிறுவனாகவே மாறிப் போனேன். என் சிறு பருவத்தில் வாண்டுமாமாவின் ரசிகன் நான்அந்த வாண்டு மாமாவின் கதை சொல்லும் நேர்த்தி, தங்களுக்கும் வருகிறது.

 குரங்கு என்ற சொல்லில் வரும் கடைசி மூன்று எழுத்துகளை வைத்து, ரங்கு என்று பெயர் சூட்டியதை ரசித்தேன்குழந்தைகளின் மன ஓட்டம் அறிந்து கதை சொல்கிறீர்கள் தங்களின் திறமைக்கும் பெருமைக்கும்  வாழ்த்துகள்.

 பணிவுடன்

கோ. மன்றவாணன்





 

 

 

 


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!