அப்பாக்கள் பலவிதம் சிறுகதைத் தொகுப்பு நூல் - இடைமருதூர் கி.மஞ்சுளா

முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளாவின் "அப்பாக்கள் பலவிதம்" சிறுகதைத் தொகுப்பு நூல் மற்றும் திருமூலரும் வாலாம்பிகையும், ஜம்புவும் ஜிங்லியும் (சிறார் நாவல்), தாத்தா சொன்ன கதைகள் (சிறார் சிறுகதைகள் ஆங்கிலத்தில்) மேலும் இவருடைய மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலி (எம்.டெக்-நேனோ டெக்) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கன்னிக்கோவில் இராஜாவின் அணில்களின் ஓட்டப் பந்தயம் (சிறார் சிறுகதை) ஆகிய நூல்கள் வெளியீ்ட்டு விழா.
08.1.2023 என் வாழ்வில் மறக்க முடியாத நாள்... அது மட்டுமன்று பிறரும் மறக்கக்கூடாத நாள்... "அப்பாக்கள் பலவிதம்" தொகுப்பு நூல் பலவிதமான தடைகளையும் தாண்டி வெற்றி விழா கண்டு வெளியாகி... என் சமகாலத்து எழுத்தாளர் பலருடைய எழுத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நன்னாள். பலவிதமான அப்பாக்களின் நல்ல பக்கங்களையும் கெட்ட பக்கங்களையும் எடுத்துரைத்த மகத்தான நாள். அப்பாவுக்கான இலக்கணம் கூறும் முதல் தொகுப்பு நூல் வெளியான நாள்.. அப்பாவை நேசிப்பவர்கள் மறக்கவே கூடாது பொன்நாள்.. தமிழவேள் சிவாலயம் ஜெ. மோகன் அவர்கள் தலைமையில் நடந்த அப்பாக்கள் பலவிதம் உள்ளிட்ட ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக சென்னை ஆழ்வார்ப்பேட்டை வாசகர் வட்டம் நூலகத்தில் இனிதே அரங்கேறியது. குறிப்பாக இயக்குநர் திரு. ராசி அழகப்பன் அவர்களின் அட்டகாசமான உருக்கமான அப்பா பற்றிய உரை எல்லோரையும் கண்கலங்க வைத்தது... இயக்குநர் பாலி. ஸ்ரீரங்கம் அவர்களின் இன்பத் தமிழ் உரையோ... எல்லோரையும் ஆடாமல் அசையாமல் உட்கார வைத்ததுடன், அவர் மட்டுமல்ல, வந்திருந்த அப்பாக்கள் அனைவரின் தோள்களையும் நிமிர்த்தி பெருமிதத்துடன் உட்கார வைத்திருந்தது. அப்பா இல்லாத பாலி. ஸ்ரீரங்கத்தின் ஏக்கப் பேச்சு கண்கலங்க வைத்தது. அவர் கூறிய அட்டகாசமான அக்கம் பக்கம் என்ன சத்தம் என்கிற கவிதையோ எல்லோர் கைத்தட்டலையும் பெற்றது. தமிழ்நாடு திரைப்படப் பாடல் ஆசிரியர் சங்கத் தலைவர் கவிஞர் தமிழமுதனின் அப்பா பற்றிய நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்காதவை... தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ. பெரியண்ணன், பேராசிரியர் இராம. குருநாதன், சிவாலயம் ஜெ. மோகன், பிரணவ சத்குரு பொன். சுந்தர வேலாயுதனார், மணிவாசகர் பதிப்பகம் ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், சிவநேயப் பேரவை மகஸ்ரீ, சொல்லருவி முத்து. சீனிவாசன், தமிழ்ச் செம்மல் புலவர் வே. பதுமனார், கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன், குழந்தை எழுத்தாளர் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், கனவுத் தமிழ் ஆசிரியர் அக்னி பாரதி, சுப்புராம் நினைவு அறக்கட்டளை நிறுவுநர் ஜெகன்நாதன்- திருமதி மகாலட்சுமி ஆகியோரின்... அற்புத உரைகள்.... அப்பா நூல் மட்டுமல்ல... எனது ஜம்புவும் ஜிங்லியும் நாவல்.... திருமூலரும் வாலாம்பிகையும்.. நூல்கள் குறித்த புரிதல்களை அற்புதமாக பதிவிட்டன.... அத் தொகுப்புக்குக் கதை எழுதியிருந்த கதாசிரியர்கள் அக்னி பாரதி, சா. இளங்கோ, விஷ்ணுபுரம் ராஜவேலு, ஜனனி ரமேஷ், ஆதிரா முல்லை, சி.மகேஸ்வரி, ராதிகா தேவி ஆகியோர் வந்திருந்தது மன நிறைவைத் தந்தது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால்.. முதன் முறையாக ஒரே மேடையில் தாய்...மகள் இருவரின் நூல்களும் வெளியானதுதான். பெண் சிங்கத்துக்குப் பிறந்தது பின் எப்படி இருக்கும்? அப்பா என்கிற மூன்றெழுத்து மந்திரச் சாவி நம்மிடம் (என் பெயருக்கு முன்பு key கி.மஞ்சுளா) இருக்கும்போது நம்மால் (என்னால்) எந்தப் பூட்டையும் (எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண) திறக்க முடியும். இந்நிகழ்ச்சி பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது.. அப்பாக்கள் பலவிதம் நூலை வாங்கி (மணிவாசகர் பதிப்பகம்) படித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அப்பாவின் அருமை பெருமைகளை (உயிருடன் உள்ளபோதே) எடுத்துக்கூறுங்கள்......முதியோர் இல்லம் உருவாவதை இனியாவது தடுப்போம்... இதுதான் அந்(என்) நூலின் வெற்றி....

 

👍👍
👍
 
 
👍
 
 
 
 
.
👍 தினமும் 10 முறையாவது அப்பா என்பதை உச்சரியுங்கள்... உங்கள் வாழ்வில் உயர்வு வருவதை உணர்வீர்கள் 🙏

 

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!