அகப்பகை காக்க காக்க...

சிவாய நம
திருச்சிற்றம்பலம்


வீரத்தாலும் ஆண்மையாலும் புறத்தே எதிர்த்து நிற்கும் பகைவரை வீழ்த்தி வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் உட்பகையாகிய காமத்தை வெல்வது அரிதினும் அரிதுதாம். அதனால் ஒருவன் அல்லது ஒருத்தி அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.

உலகம் அனைத்தையும் தம் சொல் ஒன்றினால் கட்டுப்படுத்தும் சான்றோர், பல வகையிலும் தீமை செய்யும் காமமாகிய உட்பகை தம்மை நெருங்காதபடி வருந்திக் காத்து நிற்பர். வெளிப்பகைவர் மிகப்பலராக இருப்பினும் அறிவுடை மக்கள் அஞ்சமாட்டார். ஆனால், உட்பகை ஒந்றே ஆயினும் மிகவும் அஞ்சி, தமக்குத் தீங்கு நேராதபடித் தம்மைப் பாதுகாத்துக் கொள்வர்.

புறப்பகை எதிர்த்து நின்று வெல்லக்கூடியது, அகப்பகை அஞ்சிக் காக்கத்தக்கது. புறப்பகை - வெளிப்படையாக எதிர்க்கும் பகை. அகப்பகை - உறவுபோல நின்று எதிராகச் செயல்படும் அகத்தே உள்ள பகை.

அதைத்தான் ஞானாசிரியர் குமரகுருபர சுவாமிகள்,


புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்ப் அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலும் காமப் பகை.

(நீதிநெறி விளக்கம், பா.54)

இதேபோல,

  ""வாள்போல் பகைவரை அஞ்சற்க - அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு"

(குறள்-889) என்னும் குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!