நீண்ட இடைவெளிக்குப் பிறகு....

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய வாசகப் பெருமக்களே, நண்பர்களே, உறவினர்களே.... முதற்கண் வணக்கம் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களைச் சந்திக்கிறேன். காரணம் பத்திரிகைப் பணி. சிவ அன்பர்கள், நண்பர்கள் தரும் வேண்டுகோள் (கட்டுரை வரைந்து தரவேண்டி). தட்டமுடியவில்லை. இதற்கிடையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வேறு. மேலும், வாசி, கே.எம்.வி., மணிவாசகப்பிரியா, பிஞ்ஞகன், ராதாவனமாலி, ஜோதிமகாலிங்கம், ஏகம்பர் நாயகி, பரிபூர்ணா, சிவமானசா, தகவல் தேனீ, கந்தழி, தாசரதி, தமிழ்ப்பிரேமி, ஹரிஹரசுதா, வேம்புமகள் முதலிய பல புனைபெயர்களளில் கட்டுரைகள் எழுதவேண்டியுள்ளது. அப்பப்பா..... இத்தனை புனைபெயர்களா.... எனகிறீர்களா.... என்ன செய்வது... இப்படிக் கட்டுரைகள் எழுதி பலரது மாற்றுக் கருத்துகளிலிருந்தும் பார்வையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வேண்டியிருக்கிறதே.... அதுபோகட்டும். சமீபத்தில் அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா (16.2.2014) நிகழ்ச்சியில் நூலின் முதல் பிரிதியை காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தினத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, "கழல் பேணுதல்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றும் பாக்கியம் கிடைத்தது. அச்செய்தி வேலூர் பதிப்பில்(17.2.14) வெளியாகியுள்ளது. முடிந்தால் பாருங்கள். அதன் விவரத்தையும். அங்கு ஆற்றிய சிறப்புரையும் மீண்டும் ஒரு சந்திப்பில் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!