மணிக்கவாசகப் பெருமான் குருபூஜை



வணக்கம் அன்பர்களே, வாசகப் பெருமக்களே.... மீண்டும் ஒரு குருபூஜை செய்தியோடு உங்களைச் சந்திக்கிறேன். நேற்று (2.7.2014) காவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றத்தில் ஆனி மக நன்னாளான மணிவாசகர் குருபூஜையை முன்னிட்டு திருவாசகம், திருப்பாண்டிப்பதிகம் பதிகம் நூல் வெளியிடப்பட்டது. இதில் அம்மன்றத்தின் அமைப்புச் செயலாளரான திரு. இரா சச்சிதானந்தம் அவர்கள் (90 தள்ளாத வயதிலும் மாணிக்கவாசகருக்காக அயராத அன்போடு உழைக்கிறார்), திருப்பாண்டிப்பதிகம், மலரை வெளியிட்டு வாழ்த்தி. மூலபண்டாரம் என்ற தலைப்பில் உரையாற்றியவர், திருவாசகச் செம்மணி திரு. எ.வேலாயுதனார் அவர்கள், முதல் படியைப் பெற்று இன்ப வெள்ளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியவர் இடைமருதூர் க.மஞ்சுளா அவர்கள். இந்நிகழ்ச்சிக்கு தலைமேற்று, ஒருவன் என்னும் ஒருவன் என்ற தலைப்பில் தலைமையுரை ஆற்றியவர் திருமுறைச் செம்மணி திரு. ஆ. அருளரசு அவர்கள். காலையில் திருவாசகம் முற்றோதலும், மாலையில், ஓதுவார்களின் திருமுறை விண்ணப்பம் மற்றும் சிந்தைக்கினிய திருவாசகச் சொற்பொழிவுகளும் இனிதே நடைபெற்றன. அடியேன் இந்த குருபூஜையில் கலந்துகொண்டு திருப்பாண்டிப்பதிகம் நூலின் முதல் பிரதியினைப் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு பெற்றது பெரும் பேறு. இந்நூலில் இடம்பெற்ற காதல் செய்யு உய்மின் என்ற கட்டுரை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள். கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக இம்மன்றம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இம்மன்றத்தில் பல மூத்த தமிழறிஞர்களும், அருளாளர்களும் வந்து சொற்பொழிவாற்றியுள்ளனர் என்பது மிகச் சிறப்புக்குரியது. இம்மன்றத்தைப் பற்றி பின்பு ஒரு முறை விரிவாக எழுதுகிறேன். தானே முக்தி தருகுவன் சிவன் அவன் அடியன் வாதவூரனைக் கடிவில் மனத்தால் கட்டவள்ளார்க்கே - சிவபிரகாசர் இன்ப அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!