சலங்கை பூஜை - பாபாஞ்சலி





திருச்சிற்றம்பலம்
பாபாஞ்சலியின் நடனாஞ்சலி
பாபாஞ்சலி கலைக்கோயில் மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி கடந்த 23-11-2014 ஞாயிறு மாலை சென்னை அயினாவரம் அன்னை மஹாலில் சிறப்புடன் நடைபெற்றது. திருவாசகப்பாடலே இறைவணக்கப்பாடலாக ஒலித்தது. பாரம்பரிய முறைப்படி புஷ்பாஞ்சலியோடு துவங்கிய நிகழ்ச்சி அப்பர் சுவாமிகளின் திருவங்க மாலையினை நாட்டியத்தின் மூலம் காட்சிப்படுத்தியது யாவும் அருமை. செல்வி பவானி சக மாணவிகளோடு இணைந்து ஆடிக்காட்டிய  சுந்தரரின் வரலாறு சிறப்புடன் அமைந்தது. நிறைவாக திருவாசகத்தின் சாரமாகத்திகழும் சிவபுராணத்திற்கு மாணவியரோடு இணைந்து குரு.திருவடிச்சிலம்பன் அபிநயித்தது பார்வையாளர்களை மெய் மறக்கச்செய்தது. அப்போது அங்கு கூடியிருந்த கலைஞர்கள் பெற்றோர்கள் என யாவரும் சிவபுராணத்தை இசைத்து மகிழ்ந்தனர்.
இக்கலைச்சேவையின் மூலம் தெய்வீகத்தமிழை எல்லோர் மனதிலும் பதியச்செய்வதே பாபாஞ்சலியின் நோக்கம் என்றார் அதன் இயக்குனர் திருவடிச்சிலம்பன். விழாவில் சிவலோகம் திவாகர் மஹராஜ் மற்றும் இடைமருதூர் மஞ்சுளா அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர்களை வெகுவாக பாராட்டினர்.   



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!