தமிழ் முக்தி இன்பம்

தமிழ் - முத்தி இன்பம்! ÷"இன்பம்' என்பது இல்லாத ஒரு பொருளன்று. அது ஆன்ம உணர்வுக்குப் பொருள் (விஷயம்) ஆவதுதான். இன்பம் என்பது ""எல்லாம் அற என்னை இழந்த நலம்'' (கந்தரநுபூதி) ஆகும். எல்லாம் அற்ற இடத்துக்குப் "பாழ்' என்று ஒரு பொருளுண்டு. ""முப்பாழும் பாழாய், முடிவில் ஒரு சூனியமாய், அப்பாழும் யாழ் என்றறி'' என்னும் தொடர் மூன்று மலப் பொருள்களும் (ஆணவம், கன்மம், மாயை) பாழாகி, ஆன்மாவும் இல்லாததாகி, அப்பொருளதாகிய சிவமும் தோன்றாத, இன்பநிலை என்பதை அறிவாயாக என்று பொருள்படும். "பாழ்' என்னும் சொல்லில் உள்ள "ழ' கரத்துக்கே "இன்பம்' (ஆனந்தம்) என்னும் பொருள் இருக்கிறது. ÷"தமிழ்' என்னும் சொல்லிலும் "ழ'கரம் உள்ளது. இந்திய மொழிகளில் தமிழ்மொழி ஒன்றில்தான் "ழ'கரம் உள்ளது. "தமிழ்' என்னும் சொல்லில் இதன் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். த - த் + அ. த் - தகராகாசம்; அ - இறைவன் (பரமான்மா). மி - மாயையொடு கூடிய உயிர் (ஜீவான்மா). ழ் - (இறைவனும் ஆன்மாவும் சேர்ந்தபோது உண்டாகின்ற) இன்பம். ÷ஆக, "தமிழ்' என்னும் சொல் இறைவனும் ஆன்மாவும் சேரும்போது உண் டாகின்ற முத்தி இன்பத்தைக் குறிக்கின்றது. அவ்வாறே கீழ்வரும் சொற்களிலும் "ழ'கரம் இன்பத்தைக் குறிக்கின்றது. 1. "வாழ்' என்னும் சொல்லில் "ழ'கரம் சேர்ந்து, அன்பு முதலிய பண்புகளோடு விளக்கமாய் வாழ்வதையும்; 2. "பாழ்' என்னும் சொல்லில் "ழ'கரம் சேர்ந்து, இறையும் உயிரும் ஒன்றுபடுகின்ற "லய' முறையையும்; 3. "யாழ்' என்னும் சொல்லில் "ழ'கரம் சேர்ந்து நல்ல, இனிய ஓசையையும் குறிக்கின்றது. ("திருக்குறள் பீடம்' அழகரடிகளின் கந்தரநுபூதி உரை விளக்கத்திலிருந்து...)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!