வடலூர் ஒளி நிலையம் ஒளிரட்டும் - சிறு துளி பெரு வெள்ளம்

வள்ளலார் அன்பர்களே....
சமரச சுத்த சன்மார்க்க நேயர்களே.... வள்ளலார் வழி வாழும் சான்றோர்களே.. அன்போடு கரம் கோர்த்து உதவுங்கள். இந்த அன்பரின் லட்சியம் நிச்சயம் வெல்லும் உங்களின் உதவியினால்....

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை கிட்டத்தட்ட  50 ஆண்டுகளாக சின்னாளப்பட்டியில்  நடத்தி வரும் பெரியவர் சு.ம.பாலகிருஷ்ணன். 84 வயதைக் கடந்தவர்.  சின்னாளப்பட்டியில் உள்ள தன் இல்லத்தின் ஒரு பகுதியை வள்ளலாருக்காகக் கோயில் கட்டி வழிபட்டு வரும் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்)  இவரும் இவருடைய மனைவியாரும் அங்கேயே ஒரு சிறிய அறையில் வாழ்கிறார்கள். தினமும் பசி என்று வருவோர்க்கு அன்னதானம் செய்துவருகிறார்கள், திருவருட்பா ஓதுதல் ஒதுவித்தல் போன்றவையும் தொடர்ந்து நடந்து வருகின்றன.





இவர் இத்தள்ளாத வயதிலும் வடலூரில் தைப்பூசத்தின் போது வரும் அன்பர்களுக்காக, குறிப்பாக பெண்கள், முதியோர்களாக ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கி அது பண வரவும் பொருள் வரவும் இன்றி தடைப்பட்டுள்ளது. அவர் காலத்துக்குள்ளாகவே இதைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று விருப்பம் கொண்டுள்ளார். ஆனால்... நல்ல உள்ளங்கள் உதவினால் அல்லவா நல்ல செயல்கள் நாட்டில் நடந்தேறும்....

அவர் முன்வைத்துள்ள வேண்டுகோள் இதுதான்.

வடலூர் ஒளிநிலைய கட்டடத் திருப்பணியும் முதியோர் காப்பகமும்:

வடலூர் தருமச்சாலை வீதியில், சின்னாளப்பட்டி தர்ம கைங்கர்யங்களுக்காக வாங்கித் தரப் பெற்றுள்ள காலி மனையிடத்தில் கூரை வேயப்பட்டு, கடந்த 45 ஆண்டுகளாக சன்மார்க்க அன்பர்களின் பேருதவியோடு சின்னாளப்பட்டி சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மூலம் தைப்பூச நாளன்று அன்னதானம் நடைபெற்று வருகிறது. விழாக்காலங்களில் தங்கும் வசதி, குளியலறை வசதி, பிராத்தனைக்கூடம், சமையல்கூடல், முதியோர் காப்பகம், போதிய பாதுகாப்பு போன்றவை இல்லையென்பதால், பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க "வடலூர் ஒளி நிலையம்' என்ற பெயரில் 2010-இல் மேற்கூறப்பட்ட பல வசதிகளுடன் இக்கட்டடத் திருப்பணி தொடங்கப்பட்டு நடைபெறுகிறது. இந்த ஒளி நிலையக் கட்டடத் திருப்பணி மிகவிரைவில் ஒளிபெற, பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு வள்ளலாரின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்.

இப்பணிக்கு 40 லட்சம் வரை தேவைப்படுகிறதாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. அந்தப் பழமொழிக்கு உயிர் கொடுக்க வாருங்கள்... ஒளி நிலையம் ஒளிப்பெறச் செய்யுங்கள் அன்பர்களே... நீங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் கூட அந்தத் திருப்பணிக்கு கட்டாயம் உதவக் கூடும்.

அன்பு, உயிரிரக்கம், தயவு, ஜீவகாருண்யம், பசிப்பிணி போக்குதல், அனைத்து உயிரையும் தன்னுயிர் போல் கருதுவது இவைதான் வள்ளலாரின் உயிர்மூச்சாக இருந்தது. அவர் வழி நடந்து அவரது திருப்பணிக்கு கைகோர்த்து உதவுவோம்... வாருங்கள்...

-இடைமருதூர் கி.மஞ்சுளா (19.1.2016)
------------------------------------
தொடர்புக்கு: சு.ம. பாலகிருஷ்ணன் - 94898 68005 / 98421 24316.
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்,
பேருந்து நிலைய சாலை,
சின்னாளப்பட்டி - 624 301.







Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!