மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

மலேசியாவில் 25- 29 பிப்ரவரி 2016இல்  நடைபெற்ற கோலாலம்பூர் - சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பு....

அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறுபது எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டன. அந்தகைய படைப்புகளுள் எனது நிம்மதி சிறுகதைத் தொகுதியும் ஒன்று.

இச் சிறுகதைத் தொகுதிக்கு என் முதல் வாசகியான என் தாய்தான் அணிந்துரை வழங்கியிருக்கிறார். ஆனால், அந்த நூலைக் கண்குளிரக் காண அவர் இவ்வுலகில் இல்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இறைவன் திருவடியை அடைந்துவிட்டார். அதனால், நிம்மதி என்ற சிறுகதைத் தொகுதி எழுதிய எனக்கு நிம்மதி கிடைத்ததா என்றால்........ மௌனமே பதில்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் (துணையமைச்சர்,  இளைஞர், விளையாட்டுத் துறை) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 27.2.16 அன்று மலேசியாவில் வெளியாகும்  தமிழ் நேசன் பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியாகி இருக்கிறது. (பக்.7) 

சென்னை கலைஞன் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி ஒரு நெகிழ்ச்சியான அனுபவம். அதை விவரிக்கின் விரியும். அருகில் இருந்தும் பேசிப் பழகிக்கொள்ளாத பல எழுத்தாளர்களை ஒரே இடத்தில் சேர்ந்த பெருமை அவர்களையே சேரும். 

இப்பயண அனுபவம் பற்றி பின்பு ஒரு பயணக் கட்டுரையைக் கட்டாயம் பதிவு செய்கிறேன், அதற்கு முன்பு....

ஒரு சில முக்கியமான புகைப்படங்களை மட்டும் இங்கு இணைக்கிறேன். ஆனால் எடுத்த புகைப்படமோ 500க்கும் மேலே.....






இந்தப் பயணத்தின் அனுபவத்தின் தொடர்ச்சி மிக விரைவில் பதிவு செய்யப்பட்டும்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா
3.3.2016



Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!