நாம் அன்றாடம் பேசுவது தமிழா?

நாம் அன்றாடம் பேசுவது தமிழா?
தொகுப்பு (சிவமானசா) இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி - தமிழ்மணி 03.4.2016



பாரசீகம் - தமிழ்

ஜமக்காளம் - விரிப்பு
ஜமீன் - நிலபுலம்
மாலுமி - நாவாயோட்டி
பஜார் - கடைத்தெரு
மைதானம் - திறந்தவெளித்திடல்

டச்சு - தமிழ்

துட்டு - காசு, பணம்
பம்பளிமாசு - பேரின்னரந்தம்
கக்கூஸ் - கழிப்பறை
சாக்கு - கோணிப்பை

பிரஞ்சு - தமிழ்

பட்டாளம் - படைத்துறை
பொத்தான் - பொத்தியான்
ரோந்து - இரவுக்காவல்
லாந்தர் - ஆடி விளக்கு
பிரேசியர் - கச்சு (கச்சம்), நகிலுறை

பிராகிருதம் - தமிழ்

கஷாயம் - கருக்கு
தம்பம் - கம்பம், தூண்
துவஜஸ்தம்பம் - கொடிக்கம்பம்
தம்மம் - அறம்
பிக்கு, பிக்குணி - ஆண்டி
விஞ்ஞாபனம் - வேண்டுகோள்
விஞ்ஞானம் - அறிவியல்
வேசை - பரத்தை, விலைமகள்

கன்னடம் - தமிழ்

எகத்தாளம் - பகடி(கேலி) செய்தல்
ரகளை - கலவரம், குழப்பம்
டால் - ஒளி

தெலுங்கு - தமிழ்

ஆஸ்தி - செல்வம்
தாராளம் - மிகுதி
கெட்டியாக - உறுதியாக
கெலிப்பு - வெற்றி
கேப்பை - கேழ்வரகு
சந்தடி - இரைச்சல்
சரக்கு - வாணிபப் பொருள்
சாகுபடி - பயிரிடுதல்
சொகுசு - நேர்த்தி
சொச்சம் - மிச்சம்
சொந்தம் - உரிமை
சோலி - வேலை
தாறுமாறு - ஒழுங்கின்மை
துரை - பெரியோன்
தொந்தரவு - தொல்லை
நிம்மதி - கவலையின்மை
பண்டிகை - பெருநாள்
பந்தயம் - பணயம்
வாடகை - குடிக்கூலி
வாடிக்கை - வழக்கம்
வேடிக்கை - காட்சி

உருது - தமிழ்

அசல் - முதல்
அந்தஸ்து - நிலை
இலாகா - துறை
இனாம் - அன்பளிப்பு
காகிதம் - தாள்
சந்தா - கட்டணம்
சர்க்கார் - அரசு
சிபாரிசு - பரிந்துரை
தயார் - முன்னேற்பாடு
தபால் - அஞ்சல்
பந்தோபஸ்து - பாதுகாப்பு
மனு - விண்ணப்பம்
மைதானம் - திடல்
ராஜிநôமா - விட்டுவிலகல்
ஜதை - இணை
ஜல்தி - விரைவாய்
ஜாஸ்தி - மிகுதி
பஞ்சாயத்து - ஐம்பேராயம்
பதில் - விடை
பலே - நன்று
பேட்டி - நேர்காணல்
குமாஸ்தா - எழுத்தர்
குஷி - மகிழ்ச்சி

தொகுப்பு: சிவமானசா
(இடைமருதூர் கி.மஞ்சுளா)


பிறமொழிச் சொற்கள் எல்லாம் நம் தமிழோடு கலந்து, தமிழ்போலவே வழங்கி வருவதை இதுவரை கண்ட சொற்கள் மூலம் அறிந்தோம்.  இப்படியொரு  தலைப்பு வைத்தது  சரிதானே.... திசை சொற்களைக் கடன் வாங்கலாம் தவறில்லை என்கிறார் தொல்காப்பியர். ஆனால், நம் தமிழில் இல்லாத சொற்களே கிடையாது என்றே எண்ணுகிறேன்.  அப்படியே இல்லை என்றால்,  பிறமொழிகளைக் கடன் வாங்கிப் பயன்படுத்தலாம்.  ஆனால், நம் மொழியிலேயே வியப்பு (ஆச்சரியம்) , மகிழ்ச்சி (சந்தோஷம்), திறந்தவெளித்திடல் (மைதானம்), கடைத்தெரு (பஜார்) முதலிய பல சொற்கள் இருக்கும்பொழுது,  ஏன் பிறமொழியைப் பயன்படுத்த வேண்டும்.....கடன் வாங்க வேண்டும்....  கூடுமானவை வேற்றுமொழியைத் தவிர்த்து எழுதவும் படிக்கவும்  முயற்சி செய்வோம். அதற்காகத்தான் இந்தத் தொடர்.....  பலராலும் பாராட்டப்பட்ட தொடர்

அன்புடன்
இடைமருதூர் கி.மஞ்சுளா






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!