வைகையில் இன்னுமொரு முறை வெள்ளம் வருமா?



பாண்டி நன்நாடான மதுரையில், நேற்று (19.2.2017)  தினமணி சார்பில் நடந்த (இலக்கிய முன்னோடிகள் வரிசையில்…) கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “வள்ளுவர் முதற்றே அறிவு” (கட்டுரை வாசிக்கும்) நிகழ்ச்சியில், முதன்முதலில் அலுவலக நண்பர்கள் சிலருடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மதுரை அரசாளும் அன்னை ஸ்ரீமீனாட்சி தரிசனத்துடன் மகன் சுப்பிரமணியனையும் (திருப்பரங்குன்றம்) தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. 

 (தினமணியும், மதுரை தமிழ் இசைச் சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி -  வள்ளுவர் முதற்றே அறிவு - கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுச்சி உரை)

கவிப்பேரரசு அவர்கள் ஆற்றிய எழுச்சி உரை சுவாமி விவேகானந்தரின் எழுச்சி உரையையே எனக்கு நினைவுகூர வைத்தது. அவரது வித்தகத் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

மகாகவி பாரதியார் ஆசிரியராக இருந்த சேதுபதி பள்ளி மட்டுமல்ல, எங்கள் ஆசிரியரும் படித்த பள்ளி அது. அங்கு எங்களை அழைத்துச் சென்றார். 51 என்ற எண்ணுள்ள அறைதான் பாரதியார் பாடம் நடத்திய அறை என்றவுடன், அங்கு ஓடிச் சென்று ஒரு மாணவியாய் சிலமணித் துளிகள் அமர்ந்து அகமகிழ்ந்தேன்.





மனத்திருப்தியோடு மதுரையை விட்டுத் திரும்பினாலும், வாய்விட்டுக் ஓவெனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது. காரணம்,
 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… சங்கம் வைத்து முதன்முதலில் தமிழ் வளர்த்த இதே பாண்டி நன்நாட்டில், பாண்டிய மன்னனுக்குப் புத்தி புகட்டவும், மாணிக்கவாசகப் பெருந்தகையின் மாண்பை உலகம் அறிவதற்காகவும் வையை(கை) ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரச்செய்து, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படியும் பட்டு, திருவிளையாடல் நிகழ்த்தினான் மீனாட்சிசொக்கநாதன்.


(மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி)
 
 (இந்த வகுப்பறை (எண்51) மகாகவி பாரதியார் பாடம் நடத்திய அறை)


 ஆனால், இன்று…. வையை ஆற்றில் கிரிக்கெட் விளையாடுகின்றனர், மாடுகள் மேய்கின்றன, ஆடுகள் திரிகின்றன… வராட்டிகள் காய்கின்றன, குழுவாக அமர்ந்து பீடி, சிகிரெட் பிடித்துக்கொண்டு (உழைப்பாளர்கள்) சீட்டுக்கட்டு ஆடுகின்றனர், சிறு சிறு குடிசைக் குடியிருப்புகள் தோன்ற எத்தனிக்கின்றன, பள்ளம் இருக்கும் இடங்களில் மட்டும் சொம்பில் அள்ளும் அளவுக்கு நீர் தேங்கி நிற்கிறது…..இதையெல்லாம் பார்த்து எப்படி அழாமல் இருக்க முடியும்? இனிவரும் காலங்களில் ஆறுகளில் வீடு வாடகைக்குக் கிடைத்தால்கூட வியப்பதற்கில்லை…. இயற்கைதான் (வருண பகவான்தான்) கருணை காட்ட வேண்டும்…. வைகை ஆற்றில் இன்னுமொருமுறை வெள்ளம் வராத என்று ஏங்குகிறேன்….. பிரார்த் திக்கிறேன்… அதைக் கண் குளிரக் காணக் காத்திருக்கிறேன்...

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!