நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்


நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்

கோவை, ஈஷா அறக்கட்டளையின்  நிறுவனரான சற்குரு, மக்களுக்கு  யோகப் பயிற்றி, ஆன்மிகம் என்பதையும் கடந்து,  ஒரு சமூகச் சிந்தனையோடு,  அக்கறையோடு  "நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்' என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  நம் நதிகளும் ஆறுகளும்  வற்றிக்கொண்டே வருகின்றன. இதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே சற்குருவின் அவர்களின் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
 

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தினமணி சார்பாக சற்குரு அவர்களை நேர்காணல் செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் கேட்ட நான்கு ஐந்து கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள், விளக்கங்கள் மிக நீண்டவை. இக் கூடிய விரைவில் இந்த வலைப்பூவில் படிக்கலாம்.

இந்தப் பேட்டியின் சுருக்கம் இன்று தினமணியில் (பக்.12) வெளியாகியிருக்கிறது. அதில், “நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்” என்ற தலைப்புக்குப் பதிலாக, வேறு தலைப்பில் செய்தி வெளி வந்திருக்கிறது. இந்தத் தவறுக்காக ஈஷா யோக மையத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  

நதிகளை இணைப்பதல்ல சத்குரு அவர்களின் இந்தத் திட்டத்தின் நோக்கம். நதிகளை மீட்டெடுப்பது ஒன்றுதான் சற்குருவின் நோக்கம். நதிகளை இணைப்பது அவ்வளவு சாத்தியமல்ல, நதிநீர் இணைப்பு குறித்து (“சாதித்தாரா சந்திரபாபு நாயுடு?” என்ற தலைப்பில் வெளியான இந்தவார ஆனந்தவிகடன் (23.8.17) படியுங்கள். அப்போது புரியும் நதிநீர் இணைப்பு சாத்திமா இல்லையா என்று.

 (நேர்காணலின் சுருக்கம் - தினமணி செய்தி)

அதனால்தான் சற்குரு அவர்கள் நதிகளை இணைக்கத் தேவையில்லை, மீட்டெடுத்தால் போதும் என்கிறார். எனவே, “நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்” என்பதே சற்குரு அவர்களின் புதிய திட்டம். வறண்டு போய்க் கிடக்கம் நதிகளை மீட்பதே அவரின் நோக்கம். இந்தத் திட்டம் நிறைவேறினால்,  நதிகளிலும் ஆறுகளிலும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும், தண்ணீர் கஷ்டம் ஏற்படாது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவசியம் இருக்காது.
 
சற்குரு அவர்கள் கூறியவை - "நம் பாரத நாட்டின் நன்மைக்கு மூலமானவை நதிகள். இவை அனைத்தும் வற்றிக்கொண்டே வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் 20 சதவிகிதம் தண்ணீர் கூட இல்லாத நிலை உருவாகும்.  இதைத் தடுக்க வேண்டுமானால், இந்த ஆறுகள் நதிகள்,  தொடர்ந்து ஓடவேண்டுமென்றால் சில வேலைகளை நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்.

அதுமட்டுமல்ல, நதிகள் வற்றிக்கொண்டே வருகின்றன என்பதுகூட தெரியாமல் இருக்கும் கிராமப்புர மக்களுக்கு இதன் மூலம் விழிப்புணவை  ஏற்படுத்த வேண்டும். இதை அரசாங்கத்தின் அனுமதியுடன், அரசாங்கத் திட்டமாக,  நிரந்தத் திட்டமாகக் கொண்டுவர வேண்டும்.

இது ஒரு போராட்டம் அல்ல,  ஆர்ப்பாட்டமும் அல்ல. நம் நாட்டில்  இருக்கும்

  நதிகளை எல்லாம் மீட்டெடுத்து, பின்பு இணைத்து, தண்ணீர் பிரச்னைக்கு ஒரு

  நிரந்தரத் தீர்வு காண வேண்டிய ஓர் இயக்கம்,  திட்டம்.

ஆறுகளும் நதிகளும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால்

  ஆறுகளின் இரு கரைகளிலும் மரங்களை நடுதல்,  நீராதாரத்துக்கு உதவும்

  காடுகளை வளர்த்தல், தனியார் நிலங்களில்  நெல் விவசாயத்திற்கு பதிலாகப் பழ

  மரங்களை நடுதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கம்.  


 

 இதற்கு மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் 80009 80009  என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுப்பதுதான். ஒருகோடி பேர் கொடுக்கும் இந்த மிஸ்டுகாலின் மூலமாகத்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கிறது. அதன் மூலமாகத்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்

காவேரி அனைவருக்கும் பொதுவானது. ஆனால், தமிழ்நாடு விவசாயிகள், கர்நாடக

  விவசாயிகள் என்று நாம் பிரித்துப் பார்கிறோம். அது தேவையில்லை.  அவர்கள்

  அனைவரும்  காவேரி விவசாயிகள் என்ற எண்ணமும் இயக்கியமும்  உருவாக

  வேண்டும். அதற்காக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை

 ஏற்படுத்தி,  அவர்களை மைசூருக்கு அழைத்துச் சென்று,  கர்நாடக

 விவசாயிகளுடன்,  காவிரி ஆற்றின் நடுவிலேயே ஒரு நிகழ்ச்சி நடத்திப் 

பேசவைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இரண்டு தலைமுறையாக  இதை கவனிக்காமல் வந்திருக்கிறோம். ஒரு ஆறு

  என்றால் அல்லது ஒரு நதி என்றால் வெறும்  நம் உபயோகத்துக்கு மட்டுமல்ல

 அதுவும் ஓர் உயிர்தான். அந்த உயிரினால் வெறும் மனித வாழ்க்கை மட்டுமல்ல

 பல உயிர்களும் வாழ்கின்றன. ஆனால், நாம் பொருளாதார முன்னேற்றத்திலும்

 மக்கள் தொகை வளர்ச்சியிலும்  காட்டும் ஆர்வத்தாலும் நாம் நமக்கு எது மூலம்

  என்பதையே மறந்துவிட்டோம். நதிகள் நம்முடைய மூலங்கள். அவை

  ஓடினால்தான் பாரதநாடு வளம் பெறும்.

இப்போது இருக்கின்ற நிலையில் நம் நாட்டில்  உள்ள ஒரு ஆற்றில்  40 சதவிகிதம்

  தண்ணீர் குறைந்து போயிருக்கிறது. அதிலும் இந்த நர்மதா, கிருஷ்ணா எல்லாம் 60 

 சதவிகிதம் குறைந்து போயிருக்கிறது. அப்படியானால்,  30, 40 ஆண்டுகளில் நாம்

  தண்ணீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆறுகளில் நீர் நிலையாக ஓடிக்கொண்டிருக்க வேண்டுமானால்

 ஆற்றுப்படுகைகள்தான் முக்கியம் .ஆனால் அந்த ஆற்றுப்படுகைகளில் மணல்

  அள்ளப்படுகிறது. விவசாயியின் கிணறுகளுக்குக்காகவும் தனிப்பட்ட

  நபருக்காகவும், ஆறுகளின் நடுவில் மிக நீண்ட குழிகள் வைட்டப்பட்டு, நீர்

  தேக்கிவைக்கப்படுக்கிறது . தனி மனிதனுடைய தேவைக்காக இப்படி

  ஆற்றுப்படுகைக்குத் தீங்கு செய்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவற்றைத்

  தடுத்து நிறுத்த கட்டாயம் ஒரு சட்டம் வேண்டும்.

 காவேரியில் உள்ள நீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நாம்

  நினைக்கிறோமே தவிர,  அந்தக் காவேரியை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது

  தெரியவில்லை.   ஆறு என்பது தனி சொத்து அல்ல. அது நாட்டுக்கான சொத்து

 மக்களுக்கான சொத்து. ஆற்றில், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப செய்ய முடியும்

  என்ற தன்மையை மாற்ற கட்டாயம்  ஒரு சட்டம் வேண்டும். அதற்காகத்தான்

  இந்தத் திட்டம்.   ஆறு என்றால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிய

  வேண்டும் தப்பாக நடந்து கொண்டால் அதற்கு ஒரு சட்டம் இருக்க வேண்டும்.


இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும்  பெரிய

  அளவில் ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்தும் விருகிறது. எந்தத்

  திட்டத்திற்கும் இப்படியொரு வரவேற்பும், ஒத்துழைப்பும் இருந்ததில்லை என்றே

  கூறுகின்றனர்



தண்ணீர் குடிக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு,

 அடுத்த தலைமுறையினர் தண்ணீர் பிரச்னையின்றி வாழ  முயற்சி

  மேற்கொண்டாக வேண்டும்.  இதைச் செய்யவில்லை என்றால் பிறகு அதனால்

  ஏற்படும் பாதிப்பை நம்மால்  ஜீரணிக்கவே முடியாது.


இதுகுறித்த விவரமான பதிவுகளை ஈஷா அறக்கட்டளை சார்பில் உள்ள வளைதளங்களில் சென்று படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
The link of the article – Dinamani



-இடைமருதூர் கி.மஞ்சுளா





Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!