மகளிர் தினக் கொண்டாட்டம் தேவையா ?



உலக மகளிர் தினம் கொண்டாட வேண்டியவர்களா நாம்? வெட்கக்கேடு. ஒரு பக்கம் மகளிரைப் போற்றிக்கொண்டு இன்னொரு பக்கம் அவர்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்டிருக்கும் உலகம் இது.
ஒரு நாளைக்கு பத்து பேருக்கு மேல் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுகின்றனர், ஒரு நாளைக்கு பத்து, பதினைந்து இடங்களில் மூதாட்டிகளின், நடுத்தர வயதுப் பெண்களின் கழுத்தை அறுத்து தங்க நகைக்ளுக்காக கொலையும், தாக்குதலும் நடக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை…. ஒருபுறம் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன, இன்னொரு புறம் மனைவியை வெட்டிய கணவன், அம்மாவைக் கொலை செய்த குப்பன் என்ற செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், தாய்க்கும் தாரத்திற்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாதக் காமுகத் தந்தைகளின், சகோதரர்களின் குடும்பப் பாலியல் (சிறுமிகள் மீது) தொந்தரவுகள் வேறு…. இந்த லட்சனத்தில் மகளிர் தினம் கொண்டாடுவது ஒன்றுதான் குறைகிறதாக்கும்…. 




 (ஓவியம் - தமிழ் - நன்றி: தினமணி-தமிழ்மணி)

மகளிர் தினம் கொண்டாடாத காலங்களிலும் நம் பாட்டியும், பாட்டிக்குப் பாட்டியும், அவர் பாட்டியும் பாதுகாப்பாகவே வாழ்ந்துள்ளனர்.. ஆனால், மகளிர்  தினம் கொண்டாடுகிறோம் என்ற பொய்யான பெயரில் போர்வை போத்திக்கொண்டு பெண்களைச் சீரழிக்கும் உலகிலும் இன்றும் பெண்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி மகளிர் தினம், அன்னையர் தினம் என்று கொண்டாடி பெண்களை ஏமாற்றும் வேலைகளை முதலில் நிறுத்தினாலே நாடும் உலகமும் உருப்படும். முதலில் குடும்பத்தை – குடும்பத்தில் உள்ளவர்களைப் போற்றக் கற்றுக்கொடுப்போம்…

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!