இந்தியப் பெண்மணிகள்

இன்று உலக மகளிர் தினம் (8.3.2017)


இந்தியப் பெண்மணிகளைப் புகழ்ந்து வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரிவாக ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலிருந்து சில துளிகள் மட்டும்...


"ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச்சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். பரிபூரண சுதந்தரத்துடன் இருப்பவளே நிறைவான பெண்ணாக இருக்க முடியும்.
÷இந்தியாவின் குடும்பத்தின் ஆதாரம் தாய், எங்கள் லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய், எனவே தாய் எங்களுக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். எங்கள் கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான்  "தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு' என்று நாங்கள் சொல்கிறோம்.


÷தற்கால இந்துப் பெண்களின் வாழ்க்கையினுடைய மையக் கருத்து அவளுடைய கற்பு. வட்டத்தின் மையம் மனைவி; அந்த மையத்தை நிர்ணயிப்பது அவளது கற்பு. இந்தக் கருத்தை அளவுக்கு மிஞ்சி நீட்டியதே இந்து விதவைகளை எரித்ததற்கான காரணம். இந்துப் பெண்கள் உலகின் மற்ற எந்தப் பெண்களையும்விட ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். இந்த அற்புதமான பண்பு நலன்களைப் பாதுகாப்பதுடன், அவர்களது அறிவையும் வளர்த்தோமானால், எதிர்கால இந்துப் பெண், உலகிற்கே லட்சியப் பெண்ணாக விளங்குவாள்".

(சுவாமி விவேகானந்தரின் "இந்தியப் பெண்மணிகள்' நூலிலிருந்து...)

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!